நவம்பர் 10, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பாந்த்ரா - வோர்லி கடல் இணைப்பு பாலம் வழியே பயணிக்க, பயனர்களுக்கு கட்டணம் வசூலிக்க சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு 10:15 மணியளவில், வோர்லியில் இருந்து பாந்த்ரா நோக்கி பயணிக்கும் வழித்தடத்தில், அதிவேகத்தில் வந்த கார், சுங்கச்சாவடியில் காத்திருந்த வாகனங்களில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட துயரம் நடந்தது. இறுதியில் வாகனங்களில் இருந்த 3 பேர் பரிதாபமாக பலியாகினர். அவர்கள் அனைவரும் படுகாயத்துடன் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். Nabati Cashback: 10 ரூபாய் கேஷ்பேக் கொடுப்பதாக, தனிநபர்களின் தகவலை சேகரிக்கும் நபாட்டி; விபரம் இதோ.!
ஆனால், கவலைக்கிடமான வகையில் இருந்தவர்கள், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 12-க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்துக்கு காரணம் என்ன? அதிவேகமாக காரை இயக்கி வந்தது எதனால்? என விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்தவர்கள் மது அருந்தி வாகனத்தை இயக்கினார்களா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும்.
#WATCH | Maharashtra | Around 12 people injured after a speeding car collided with a total of 6 vehicles parked at the toll plaza in the Bandra direction. The speeding car was coming from Worli towards Bandra. 3 of the injured are in serious condition: Mumbai Police
(Warning:… pic.twitter.com/3ijVwEls71
— ANI (@ANI) November 9, 2023