Nellai Junction Brokers Atrocity: கூடுதல் கட்டணம் வசூலித்து, கவுண்டருக்கு வெளியில் முன்பதிவு: நெல்லை சந்திப்பில் தட்கல் பயணிகளிடம் அடாவடி வசூல்.! அதிர்ச்சி விபரம் அம்பலம்.!

அதனை குறைக்க நடவடிக்கை வேண்டும்.

Passenger Balamurugan | Tirunelveli Junction (Photo Credit: @PolimerNews Facebook)

நவம்பர் 16, திருநெல்வேலி (Tirunellveli News): தென்னக இரயில்வேயின் (Southern Railway) முக்கிய வருவாய்க்கோட்டமாக திருநெல்வேலி (Tirunelveli Division) கோட்டம் இருக்கிறது. தென்னிந்தியாவின் (South India) கடைக்கோடியை நோக்கி பயணிக்கும் இரயில்கள், அங்கிருந்து தமிழகத்தில் வடமாநிலங்கள், இந்தியாவின் பிற மாநிலங்களை இணைக்க திருநெல்வேலி (Tirunelveli Junction) சந்திப்பை கடந்தே இரயில்கள் பயணிக்க வேண்டும்.

இதனால் கன்னியாகுமரிக்கு (Kanyakumari) அடுத்தபடியாக முக்கிய இரயில் சந்திப்பாக இருக்கும் திருநெல்வேலி சந்திப்பில், தினமும் ஆயிரக்கணகானான பயணிகள் வந்து செல்வது நடக்கிறது. இதில், இரயிலில் முன்பதிவை பொறுத்தமட்டில் இணையவழியில் Irctc.com மேற்கொள்ளலாம். பயணத்தேதியின் அன்று காலையில் 10 மணியளவில் இரயில் நிலையத்தில் நேரடியாக தட்கல் (Tatkal Tickets) பயணசீட்டும் வழங்கப்படும்.

இதனை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட நபர் நேரடியாக இரயில் நிலையம் சென்று பயணசீட்டு வாங்கிக்கொள்ளலாம். இந்நிலையில், நெல்லை சந்திப்பு போன்ற பிரதான இரயில் நிலையங்களில், தட்கல் பயணசீட்டு வாங்க எப்போதும் கூட்டம் அலைமோதும். தற்போது தீபாவளி பண்டிகை (Deepawali) நிறைவு பெற்றுள்ளதால், பலரும் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையை (Chennai) சேர்ந்த பாலமுருகன் என்பவர், உறவினரின் வீட்டில் நடந்த சுபநிகழ்ச்சிக்காக நெல்லை சென்றிருந்தார். அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்ப, தட்கலில் பயணசீட்டு முன்பதிவு செய்ய திருநெல்வேலி (Nellai Junction) சந்திப்புக்கு சென்றுள்ளார். அங்கு அவர் 10 நபர்கள் காத்திருந்த சமயத்தில், வரிசையில் இருந்துள்ளார். Rajapalayam Shocker: ரூ.50 கோடி சொத்துக்காக காளீஸ்வரியின் கபடநாடகம்.. முதலாளியின் கர்ப்பத்தில் தொடங்கி, மாஸ்டருடன் கள்ளக்காதலில் முடிந்த கொலை..! 

அச்சமயம் அங்கு வந்த இடைத்தரகர்கள் (Brokers) சிலர், 2 முன்பதிவு மையத்தில் (Ticket Counter) தாங்கள் தான் முதலில் வந்தவர்கள். எங்களிடம் சாதாரண இருக்கை வகுப்புக்கு ரூ.100, ஏசி வகுப்புக்கு ரூ.200 என கூடுதல் பணம் கொடுத்தால் பயணசீட்டு பெற்று கொடுக்கிறோம் என விலைபேசியுள்ளனர். பாலமுருகன் இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், அவருக்கு அடுத்த வந்தவர்களிடம் பேரம்பேசி, அவர்கள் ஒப்புக்கொண்டதால் அவர்களுக்கு முன்பதிவுக்கு வழிவகை செய்துள்ளனர்.

இதனால் முன்னதாகவே சென்று 10வது நபர் என்ற இடத்தில் இருந்த பாலமுருகன், 16வது இடத்திற்கு தள்ளப்பட்டு பயணசீட்டு உறுதி செய்யப்படவில்லை. முன்பதிவு மைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால், அவர்கள் இரயில்வே காவலர்கள் வருவார்கள். உட்காருங்கள் என அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பாலமுருகன் இரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு மட்டுமின்றி, தனியார் செய்தி நிறுவனத்திற்கும் பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். இதுபோன்ற இடைத்தரகர்கள் காரணமாக, வரிசையில் காத்திருந்தும் பயணிக்கு தனது இலக்கு எட்டப்படவில்லை.

இடைத்தரகர்கள் 4 பேர் பயணிகளை நோட்டமிட்டு பேரம் பேசுகிறார்கள் என்றால், அங்கு பணியாற்றும் இரயில் நிலைய அதிகாரிகளின் நேரடி / மறைமுகம் ஒத்துழைப்பு இன்றி அவை சாத்தியமில்லை என்பதால், இரயில்வே நிலைய உயர் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைத்தரகர்களை ஒழிக்க செயலாற்ற வேண்டும் எனவும் பாலமுருகன் கோரிக்கை வைத்துள்ளார்.

அதேபோல, இரயில்வே நிர்வாகத்தின் அறிவுரைப்படி முன்பதிவு மையங்களில் பேப்பர் வைத்து பெயர் எழுதுவது தனிநபர்களால் மேற்கொள்ள கூடாதது. அதற்கென தனி அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பின், அவர் அதனை மேற்கொண்டு, வரிசைப்படி ஒவ்வொருவருக்கும் பயணசீட்டு கிடைக்க வழிவகை செய்யலாம்.

இல்லாத பட்சத்தில் பேப்பரில் பெயர் எழுதுவது, கற்கள்-பை வைத்து இடம்பிடிப்பது, இடையில் வருவது தவறானது. முன்னதாக வந்தவர்கள் வரிசைப்படி காத்திருந்து பயணசீட்டை பெறலாம்.

Video Thanks: Polimer News