![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/images/2025/02/palani-murugan-temple-thaipoosam-2025-photo-credit-johnken61229347-x-.jpg?width=380&height=214)
பிப்ரவரி 10, பழனி (Dindigu News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில், தைப்பூசம் 2025 பண்டிகை நாளை (11 பிப்ரவரி 2025) சிறப்பிக்கப்படுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் முக்கியமான ஒன்றாக இருக்கும் பழனியில், முருகன் குடிகொண்ட நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் முருகனின் தரிசனம் கிடைத்தால் சகலமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 2025 தைப்பூச பண்டிகைக்காக பக்தர்கள் பலரும் விரதம் இருந்து காவடி, அலகு என தங்களின் நேர்த்திக்கடனை செலுத்த பழனி நோக்கி வந்துகொண்டு இருக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையும் செய்யப்பட்டுள்ளன. Thaipusam 2025: தைப்பூசம் வரலாறு., தைப்பூசம் 2025 எப்போது? விரத முறைகள், வழிபாடுகள், சிறப்புக்கள் என்னென்ன? முழு விபரம் இதோ.!
கட்டண தரிசனம் ரத்து:
இந்நிலையில், இன்று முதல் வரும் 3 நாட்களுக்கு, பழனி கோவிலில் கட்டண தரிசன முறைகள் ரத்து செய்யப்பட்டு, பொதுதரிசனம் வாயிலாக மக்கள் அனுமதி செய்யப்படுவார்கள். பழனிக்கு வரும் 4 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் கோவில் நிர்வாகம் மற்றும் இந்து-சமய அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழனி பேருந்து நிலையம், இரயில் நிலையத்தில் இருந்து பக்தர்கள் சிரமம் இன்றி கோவிலுக்கு வந்து செல்ல சிறப்பு இலவச பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. நாளை தைப்பூச திருவிழா தேரோட்டமும் நடைபெறவிருப்பதால், பழனியில் முருக பக்தர்கள் இலட்சக்கணக்கில் குவித்து இருக்கின்றனர். Thaipoosam Special: தைப்பூசம் 2025 - பழனி போக திட்டமா? சிறப்பு இரயில் சேவை அறிவிப்பு.!
தைப்பூசம் 2022 அன்று எடுக்கப்பட்ட காணொளி:
தைப்பூசம்... பழனி ஆண்டவா🙏 pic.twitter.com/kVOjEnApZD
— Naadhas (@mpgiri) February 8, 2020