
பிப்ரவரி 19, திருமலை (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், திருமலை திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் (Tirupati Venkateswara Temple), தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் நடக்கின்றன. வரும் மே மாதம் நடக்கவுள்ள சேவைகளுக்கான முன்பதிவு தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி 2025; நாள், விரத வழிபாடு மற்றும் சிவனை வழிபட உகந்த நேரம் குறித்த முழு விவரம் இதோ..!
திருப்பதி தரிசன முன்பதிவு:
அதன்படி, ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை எலக்ட்ரானிக் குலுக்கலுக்கு, நாளை (பிப்ரவரி 20) காலை, 10 மணி வரை முன்பதிவு செய்யலாம். ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கு, வரும் பிப்ரவரி 21ஆம் தேதி காலை, 10 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது. ஆன்லைன் மூலம் தரிசிக்கும் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான முன்பதிவு, பிப்ரவரி 21ஆம் தேதி மாலை, 3 மணிக்கு தொடங்கும்.
மே மாத சிறப்பு தரிசனம்:
மேலும், அங்கப்பிரதட்சணம் முன்பதிவிற்கு வரும், பிப்ரவரி 22ஆம் தேதி காலை 10 மணிக்கும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தரிசனத்திற்கான முன்பதிவு, மாலை 3 மணிக்கும் தொடங்குகிறது. மே மாத சிறப்பு தரிசனத்திற்கு (Tirupati Darshan), 300 ரூபாய்க்கான முன்பதிவு வரும் பிப்ரவரி 24ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும். அன்று மாலை, தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவும் செய்யப்படும்.