Tirupati Laddu Row: திருப்பதி லட்டு விலங்கு கொழுப்பு விவகாரம்; திண்டுக்கல் ஏஆர் டைரி நிறுவனத்தில் மத்திய உணவுப்பாதுகாப்புத்துறை ஆய்வு..!
திண்டுக்கல் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஏஆர் டைரி பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனம், திருப்பதி லட்டு விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய நிலையில் சோதனைகள் தொடருகிறது.
செப்டம்பர் 21, திண்டுக்கல் (Dindigul News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டுகள் வழங்கப்படுகிறது. திருப்பதி லட்டு உலகப்புகழ்பெற்ற, தனித்துவமான மற்றும் தயாரிப்பு காப்புரிமை கொண்ட லட்டு ஆகும். இந்த லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், முந்தைய ஆட்சிக்காலங்களில் விலங்குகளின் கொழுப்புகள் சேர்க்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டது என்ற விஷயம் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் முன்வைக்கப்பட்டது. முந்தைய ஆட்சிக்காலத்தில் அரசை கைவசம் வைத்திருந்தவர்கள், இந்த சர்ச்சை செயலை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது. Gold Silver Price: சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது தங்கம் விலை; இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
திண்டுக்கல் ஏ.ஆர் டைரி நிறுவனம்:
இந்த விஷயம் தேசிய அளவில் திருப்பதிக்கு வந்து சென்ற பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருந்தது. பரிசோதனையில் மீன், மாடு உட்பட விலங்குகளின் கொழுப்புகள் நெய்யில் கலக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, திருப்பதி கோவிலுக்கு தற்போது நெய் விநியோகம் செய்யும் திண்டுக்கல்லை சேர்ந்த ஏஆர் டைரி நிறுவனம் சர்ச்சையில் சிக்கியது. இதுகுறித்த செய்தி வெளியானதும், திண்டுக்கல் ஏ.ஆர் டைரி நிறுவனம், தனது கிளை அலுவலகங்கள் முதல் தயாரிப்பு நிலையம் வரை அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெளிவுபடுத்தியது.
மாதிரிகள் சேகரிப்பு:
இதனையடுத்து, நேற்று மாநில உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், திண்டுக்கல் ஏ.ஆர் டைரி நிறுவனத்திற்கு சென்று நெய் மாதிரிகளை சேகரித்தனர். இந்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மத்திய உணவுப் பாதுகாபுத்துறை அதிகாரிகள் ஏஆர் டைரி நிறுவனத்தின் பால் பொருட்கள் உற்பத்தி முனையத்தில் சோதனை நடத்தினர். அங்கிருந்த பால், பால் தயாரிப்பு பொருட்களான நெய் உட்பட தயாரிப்புகளை சேகரித்து, ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.