Anna Birthday Medal: காலில் வெட்டுக்காயத்துடன் பலாத்கார குற்றவாளிகளை பிடித்த காவல் உதவி ஆய்வாளர் உட்பட 127 பேருக்கு அண்ணா பதக்கம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை, சீருடை அலுவலர்கள் & பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
செப்டம்பர் 14, சென்னை (Chennai): மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மற்றும் திமுக மூத்த தலைவர், அண்ணாவின் (C.N. Annadurai) பிறந்தநாள் 15 செப் 2023 அன்று சிறப்பிக்கப்படவுள்ளது. அன்றைய நாளில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் வழங்கப்படும். இந்நிலையில், தமிழ்நாடு அரசு நடப்பாண்டில் காவல்துறை, சீருடை பணியாளர்கள், கைரேகை நிபுணர்கள் ஆகிய அரசு ஊழியர்களில் சிறப்பாக பணியாற்றிய பலருக்கும் அண்ணா பதக்கம் (Anna Medal) வழங்கி கௌரவிக்கவுள்ளது. இதற்காக 127 தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில், இராமநாதபுரம் (Ramanathapuram) மாவட்டம் சாயல்குடி பகுதியில் நடந்த பலாத்காரம் மற்றும் கொள்ளை குற்றாவளிகளை பிடிக்கச்சென்று, எதிராளிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி கால்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளர் நவநீத கிருஷ்ணனுக்கு (Sub Inspector Navaneedha Krishnan) தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கம் வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. Jawan X Money Heist: மணி ஹெய்ஸ்டில் இருந்து மனசாட்சியே இல்லாமல் அட்லீ சுட்ட இட்டலி; வைரலாகும் வீடியோ.!
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு, காவல் துறையில் தலைமைக் காவலர் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் மாவட்ட அலுவலர் வரையிலான 8 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் சிறை கண்காணிப்பாளர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில் ஊர்க்காவல் படைவீரர் முதல் படைதளபதி வரையிலான 4 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும்,
விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் 2 அலுவலர்கள் துணை இயக்குநர் மற்றும் அறிவியல் அலுவலர் ஆகியோருக்கும், அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் "மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள்" வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். Anna Birthday Medal: காலில் வெட்டுக்காயத்துடன் பலாத்கார குற்றவாளிகளை பிடித்த காவல் உதவி ஆய்வாளர் உட்பட 127 பேருக்கு அண்ணா பதக்கம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!
மேலும், சாயல்குடி காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில், கூட்டுப் பலாத்காரம் மற்றும் கொள்ளை குற்றத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு தலைமறைவான குற்றவாளிகளை 25.03.2022 அன்று கைது செய்யும் பணியில் ஈடுபட்டப் போது திரு கே.நவநீத கிருஷ்ணன், உதவி ஆய்வாளர், தீவிர குற்றத்தடுப்பு பிரிவு, இராமநாதபுரம் மாவட்டம், எதிரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு இடது தொடையில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த போதும், சற்றும் தளர்வில்லாமல் தனது தைரியச் செயலினால் இரண்டு எதிரிகளையும் கைது செய்ய உதவியாக இருந்துள்ளார். இந்த தாக்குதலில் தலைமைக் காவலர் திரு.கருப்பசாமி என்பவரின் உயிரை காப்பாற்ற மிகவும் உதவியாக இருந்துள்ளார். திரு கே.நவநீத கிருஷ்ணன், உதவி ஆய்வாளர் அவர்களின் துணிச்சலையும், செயலையும் பாராட்டி அவருக்கு காவல் துறையின் வீரதீர செயலுக்கான "மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கம் வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
மேற்கண்ட பதக்கங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)