செப்டம்பர் 14, மும்பை (Cinema News): அட்லீ (Director Atlee Kumar) இயக்கத்தில், ரெட் சில்லிஸ் எண்டெர்டைன்மெண்ட் தயாரிப்பில், அனிரூத் இசையில், ரூ.300 கோடி பொருட்செலவில் தயாரான திரைப்படம் ஜவான் (Jawan). கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியான ஜவான் திரைப்படம், இன்று வரை வசூல் மழையை குவித்து வருகிறது.

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், யோகிபாபு, சன்யா மல்கோத்ரா, பிரியா மணி, ரிதி தோக்ரா, சஞ்சய் தத், ரியாஸ் கான், பாக்ஸர் தீனா உட்பட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

தமிழில் விஜயை வைத்து மாஸ் காண்பித்த இயக்குனர் அட்லீயை பாலிவுட்டுக்கு அழைத்துச்சென்ற நடிகர் ஷாருக்கான், தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் ஒப்பந்தமிட்டு அட்லீக்கு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்தார். அந்த வாய்ப்பை அட்லீயும் சரியாக பயன்படுத்திக்கொண்டது படத்திற்கு வெற்றியாக அமைந்துவிட்டது. 12 Year Old Kid Saves Therapist: நீச்சல் குளத்தில் மயங்கி விழுந்தவரை காப்பாற்றிய 12 வயது சிறுவன்; தனிநபராக போராடிய பதைபதைப்பு காட்சிகள் வைரல்.! 

ரூ.300 கோடி செலவில் தயாரான ஜவான் திரைப்படம், தற்போது வரை ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியான திரைப்படம், 6 நாட்களில் 590 கோடி அளவில் வசூல் செய்து இந்திய அளவில் சரித்திர சாதனை படைத்தது.

பொதுவாக அட்லீயின் திரைப்படங்கள் மீது திருட்டுக்கதை தொடர்பான பல்வேறு விமர்சனங்கள் எழும். விஜயை வைத்து அவர் இயக்கிய பல படங்களே அதனை எதிர்கொண்டு இருக்கின்றன. பிற படத்தில் உள்ள காட்சியை அங்கம் கூட மாற்றாமல் அப்படியே வைத்து ரசிகர்களிடையே மாஸ் காண்பிப்பதில் அட்லீ வல்லவர் என்றும் கூறலாம்.

இதுகுறித்து அவரிடமே கேட்கையில், இசையை எடுத்துக்கொண்டால் சரிகமபதநி மட்டுமே, மெட்டுக்கள், சந்தங்கள் எவ்வுளவோ அவ்வுளவே.. அதையே தான் திரும்ப திரும்ப வேறு பரிணாமங்களில் வரிகளோடு படுவார்கள். அதேதான் இதும் என விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், ஜவான் திரைப்படமும் அப்படியான விமர்சனத்தை சந்தித்துள்ளது. படத்தின் டிரைலர் காட்சிகள் ஒருசில பேச்சுக்களை எடுத்துவிட்டதாலும், படத்தின் வெளியீட்டுக்கு பின் அட்லீ மணி ஹெய்ஸ்ட் வரை காட்சிகளை வைத்துள்ளது உறுதியாகியுள்ளது. அது தொடர்பான விடியோவும் வைரலாகி வருகிறது.