Tamil Pudhalvan Scheme: 3.8 இலட்சம் கல்லூரி மாணவர்கள் பலன்பெறும் தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடக்கம்; இனி மாதம் ரூ.1000 .!
இதன் வாயிலாக 3 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பலன் பெறுவார்கள்.
ஆகஸ்ட் 09, கோவை (கோவை News): தமிழ்நாடு மாநில அரசுப்பள்ளிகளில், தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்காக, அவர்களின் உயர்கல்விக்கு வழிவகை செய்யும் பொருட்டு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், கல்லூரிகளில் பயின்று வரும் மாணவிகளுக்கு ரூ.1000 நிதிஉதவி வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டமானது பின்னாளில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று, பின் உயர்கல்விக்கு சேர்ந்த மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
தமிழ்ப்புதல்வன் திட்டம்:
இந்நிலையில், அரசுப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று, உயர்கல்விக்கு இணைந்துள்ள மாணவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு, அவர்களுக்கும் 'தமிழ்ப்புதல்வன் (Tamil Pudhalvan Scheme)' திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டமானது இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினால், கோவையில் வைத்து தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் வாயிலாக இலட்சக்கணக்கான மாணவர்கள் பலன் பெறுவார்கள். TN Weather Update: காலை 10 மணிவரையில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
3.8 இலட்சம் மாணவர்கள் பலன் பெறுவார்கள்:
அதாவது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, உயர்கல்விக்காக கல்லூரிகளில் சேர்ந்துள்ள 3.8 இலட்சம் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் வாயிலாக மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், "எந்த நிலையிலும் கல்வியை மட்டும் விட்டுவிடக்கூடாது. பள்ளிப்படிப்பை முடித்த ஒவ்வொரு மாணவரும் உயர்கல்வி படிக்கச் வேண்டும்" என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
உக்கடம் ஆத்துப்பாலம் திறப்பு:
இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், கோவை நகரில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல நிகழ்ச்சிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார், நிறைவுற்ற திட்டங்களை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறார். உக்கடம் பகுதியில் 3.8 கி.மீ தூரத்திற்கு, ரூ.461 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தையும் மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.