TN Regulates Online Gaming: இனி ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் விபரீதங்களுக்கு முற்றுப்புள்ளி. தமிழக அரசு அமைத்திருக்கும் சட்டஒழுங்கு ஆணையம்.!
ஆன்லைன் விளையாட்டுகளின் கண்காணிக்கவும் மேலும் முறைகேடாக இயங்கும் ஆன்லைன் விளையாட்டுகளை தடைசெய்யவும் தமிழக அரசு ஐந்து பேர் கொண்ட ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்திருக்கிறது.
(ஆகஸ்ட் 22, சென்னை): ஐந்து மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை விதித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசு ஐ.ஏ.எஸ் (IAS) அதிகாரி எம்.டி நிஜாமுதீன் தலைமையிலான, ஐந்து உறுப்பினர்கள் கொண்ட ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்திருக்கிறது.
ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் (Retired IPS) அதிகாரி எம்.சி சாரங்கன், கிண்டி பொறியியல் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் (Retired Professor) சி.செல்லப்பன், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் ஓய்வு பெற்ற மருத்துவ உளவியலாளர் (Clinical psychologist) ஓ.ரவீந்திரன் மற்றும் இன்-கேஜ் குரூப்பின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) விஜய் கருணாகரன் ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்கள் ஆவர். Hyderabad Shocker: கணவன்-மனைவி தகராறில், தெருவில் விளையாடிய அப்பாவி சிறுவனின் கழுத்தை அறுத்த ஆட்டோ ஓட்டுநர்; பதைபதைக்கும் வீடியோ.!
இந்த ஆணையம் தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுகளை சரிபார்த்து அவற்றின் வெளியீட்டாளர்களுக்கு பதிவுச் சான்றிதழை வழங்கும்.
இந்தக் குழு முறைகேடாக இயங்கும் ஆன்லைன் விளையாட்டுகளை (Online games) தடை செய்ய பரிந்துரைக்கும் என்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் தகவல்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் கண்காணிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே சில ஆன்லைன் விளையாட்டு உரிமையாளர்கள் தாங்கள் முறையானா வரித்தொகையை அரசாங்கத்திற்குச் செலுத்துவதாகவும் அதனால் தங்களை சூதாட்டக்காரர்கள் பட்டியலில் சேர்க்கமுடியாது என்றும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.