Paramilitary Officer: "என்னோட பேக்-கை திருடிட்டாங்க.. திருச்சி போலீஸ் கண்டுகொள்ளவில்லை" - துணை இராணுவ வீரர் பகீர் குற்றசாட்டு..! சரமாரி கேள்வி...!

தனது கைப்பையை திருடிவிட்டார்கள் என புகார் அளிக்க சென்றும், காவல் அதிகாரிகளின் அலட்சியத்தால் எவ்வித வழக்குப்பதிவும் செய்ய இயலவில்லை என நாட்டுக்காக போராடும் இராணுவ வீரர் திருச்சியில் குமுறி சென்றார்.

Snips from Viral Video (Photo Credit: Facebook)

மே 29, திருச்சி (Trichy News): சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள இராணுவ அதிகாரியின் வீடியோ ஒன்றில், "நேற்று இரவு 9 மணியளவில் எனது கைப்பையை திருடி சென்றுவிட்டார்கள். தண்ணீர் கேன் வாங்க இறக்கி வைத்திருந்த 2 நிமிடத்தில் கைப்பை காணாமல் போனது. அதில் எனது விலையுயர்ந்த பொருட்கள் இல்லை என்றாலும், எனது அடையாள அட்டை இருக்கிறது.

நான் துணை இராணுவத்தில் பணியாற்றி வருவதால், எனது அடையாள அட்டையை தவறுதலாக யாரேனும் உபயோகம் செய்யக்கூடும் எனக்கருதி, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றேன்.

அங்கு இருந்த காவல் அதிகாரியிடம் 5 நிமிடத்திற்குள் தகவலை தெரிவிக்கிறேன். அவரோ, "தம்பி தங்களின் பொருளை தாங்களே பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார். அனைவரும் தங்களின் பொருள் திருடுபோக வேண்டும் என அலட்சியமாக இருப்பது கிடையாது. ஏதேனும் ஒரு சூழலில் திருடு போகிறது. CSK Fans Sleeping at Railway Station: மழையினால் தடைபட்ட சென்னை – குஜராத் அணிகளின் ஆட்டம்; இரயில் நிலையத்தில் உறங்கிய சென்னை அணியின் ரசிகர்கள்.!

உங்களுக்கு தெரியாத திருடர்கள் யாரேனும் திருட்டு செயலில் ஈடுபடப்போவது இல்லை. அந்த சரகத்தில் திருட்டு செயலில் ஈடுபடுவோர் குறித்த தகவல் உங்களுக்கு தெரியும்; தெரிந்திருக்க வேண்டும். அதற்காகவே நீங்கள் காவல் பணியில் ஈடுபட்டு வருகிறீர்கள். நான் துணை இராணுவத்தில் இருப்பதால், அடையாள அட்டையை அவர்கள் உபயோகம் செய்யக்கூடும்.

சம்பவ இடத்தில் இருக்கும் சி.சி.டி.வி கேமிராவை சோதனை செய்யுமாறு கேட்டபோதும், அதன் காட்சிகளை அவர்கள் காணவில்லை. எனக்கு அந்த அனுமதி வழங்கினாலும் ஒருமணிநேரத்தில் அவர்களை கண்டறிவேன். ஆனால், அதற்கும் வழி இல்லை. முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய கூறியபோது, இணையவழியில் பதிவு செய்யுங்கள் என்று கூறுகிறார்கள்.

10 காவலர்கள் இருக்கும் இடத்தில் நான் முதல் தகவல் அறிக்கையை இணையவழியில் எதற்காக பதிவிட வேண்டும்?. சம்பவ இடத்திலேயே நான் புகார் வழங்குகிறேன், அதனை ஏற்கவில்லை. எதற்காக அங்கு 10 காவலர்கள்?. நான் இராணுவத்தில் இருக்கிறேன் என்று கூறியும் வழக்கு கூட பதியாமல் அலட்சியமாக இருக்கிறார்கள். CSK Vs GT: சென்னை – குஜராத் அணிகள் இடையே இன்றைய ஆட்டம் நடைபெறுமா?.. வருண பகவான் நினைப்பது என்ன??.. விபரம் உள்ளே..!

எனக்கு இந்நிலை என்றால், சாதாரண பொதுமக்கள் புகார் கொடுத்தால் நிலை என்ன?. திருடுபோன பொருள் கொடுத்து புகார் அளிக்க சென்றால், திருடனுக்கு நீதான் திருட வாய்ப்பளித்தாய் என புகார் பதிவு செய்வார்களா?. இவ்வாறான செயலை செய்வதைப்போல அவர்கள் பேசுகிறார்கள், பதில் சொல்கிறார்கள்.

என்னைப்பொறுத்தமட்டில் அவர்களும் - திருடர்களுக்கு இடையே ஏதேனும் நல்லுறவு இருக்கலாம். திருடுவதில் சமபங்கு எடுத்துகொள்ளலாம் என பேசவைத்து கூட திருட்டு நடைபெறலாம். பொதுவாக வடமாநிலத்தவரை பலரும் குறை சொல்வார்கள். அங்கிருந்து வந்த எனக்கு எப்போதும் பொருள் மாயமானது இல்லை. ஆனால், இங்கோ நிலைமை தலைகீழ்" என கூறினார்.