Trichy holds 6th place in Polluted Cities: மத்திய அரசின் தூய்மை காற்று திட்டம்: காற்று மாசுபாடு அளவில் திருச்சிக்கு 6-வது இடம்.!
காற்று மாசு அளவின் அடிப்படையில் திருச்சி மாநகரம் ஆறாவது இடத்தில் இருக்கிறது.
செப்டம்பர் 29, திருச்சி (TamilNadu News): இந்தியாவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதன் விளைவாக நாட்டின் முக்கிய நகரங்களில் காற்று மாசு ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசு காற்று மாசுபடுவதை குறைக்கும் விதமாக, தேசிய தூய்மை காற்று திட்டம் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்தியாவின் 132 முக்கிய நகரங்களில் 20-30 சதவீதம் வரை காற்று மாசு அளவை குறைக்க இந்தத் திட்டம் செயல்பட இருக்கிறது. Python on Truck: ஓட்டுநர் கேபினில் தலைகீழாக திடீரென நுழைந்த மலைப்பாம்பு; வாகனத்தை நடுவழியில் நிறுத்தி கதறிய ஓட்டுநர்.!
காற்று மாசு அளவின் அடிப்படையில், இந்த முக்கிய நகரங்களின் தரவரிசை பட்டியலை, மத்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது. இந்த தரவரிசையில், தமிழ்நாட்டில் உள்ள திருச்சி மாநகரம், 180 மதிப்பெண்களோடு ஆறாவது இடத்தில் இருக்கிறது.
இந்த பட்டியலில் மத்திய பிரதேசத்தைச் (Madhya Pradesh) சேர்ந்த இந்தூர் (Indore) முதலிடமும், உத்திரப்பிரதேசத்தின் (Uttar Pradesh) ஆக்ரா (Agra) இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. மேலும் தமிழகத்தில் சென்னை (Chennai) மாநகராட்சி 37 வது இடத்தையும் மதுரை (Madurai) மாநகராட்சி 44 வது இடத்தையும் பிடித்திருக்கிறது.