Auto-Government Bus Accident: கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது நேர்ந்த சோகம்; கணவன் - மனைவி பலி..!
தேனியில் ஆட்டோவில் பயணித்த தம்பதி அரசு பேருந்தில் மோதி ஏற்பட்ட விபத்தில், கணவன் - மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மே 09, தேனி (Theni News): தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த தம்பதி நல்லதம்பி (வயது 37) - ரம்யா (வயது 30). இத்தம்பதிக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில், இவர்களுக்கு குழந்தை இல்லை. நல்லதம்பி சொந்தமாக ஆட்டோ (Auto) வைத்து ஓட்டி வந்துள்ளார். Nurses Day Quotes in Tamil: "செவிலியர் செய்வது தொழிலல்ல தொண்டு.." செவிலியர் தின வாழ்த்து கவிதைகள்..!
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நல்லதம்பியும் அவரது மனைவி ரம்யாவும் அவர்களது ஆட்டோவில், கம்பத்திலிருந்து தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்கு சென்றுள்ளனர். பின்னர், திருவிழாவை சிறப்பாக முடித்துவிட்டு, நேற்று காலை 6 மணியளவில் இருவரும் ஆட்டோவில் கம்பம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, க.புதுப்பட்டி தனியார் பள்ளி அருகே வந்துக் கொண்டிருக்கும் போது, மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தும் (Government Bus), ஆட்டோவும் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஆட்டோ நொறுங்கியது. அதில் இருந்த நல்லதம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவரது மனைவி ரம்யா படுகாயமடைந்துள்ளார். பேருந்தில் இருந்த பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த உத்தமபாளையம் காவல்துறையினர், உயிருக்கு போராடி கிடந்த ரம்யாவை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரம்யா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுதொடர்பாக, காவல்துறையினர் அரசு பேருந்து ஓட்டுநர் முருகன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.