Bus Accident Students Died: வளைவுப்பகுதியில் அதிவேகம்; மினி பஸ் விபத்திற்குள்ளாகி 2 பள்ளி மாணவர்கள் பரிதாப பலி.!

கண்மாய் வழி சாலையில் அதிவேகத்தில் பயணித்த பேருந்து ஓட்டுனரின் அலட்சிய செயலால், 2 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Watrap Accident (Photo Credit: X)

அக்டோபர் 31, ஸ்ரீவில்லிபுத்தூர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு (Srivilliputhur, Watrap) பகுதியில் இருந்து புதுப்பட்டி நோக்கி தனியார் மினி பேருந்து நேற்று பயணம் செய்து கொண்டிருந்தது.

அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து, அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்து மரத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் மினி பேருந்தில் பயணம் செய்த இரண்டு பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் சேர்ந்து, காயமடைந்துரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். Death Threat to Urofi: சாமியார் போல வேடமிட்ட இந்தி கவர்ச்சி நடிகைக்கு, இந்துத்துவ ஆதரவாளர்கள் கொலை மிரட்டல்; அச்சத்தில் நடிகை.! 

முதற்கட்ட விசாரணையில், கண்மாய் வளைவு பகுதியில் பேருந்து அதிவேகத்துடன் திரும்பிய போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி, பின் மரத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.

விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் அங்குள்ள புதுப்பட்டி-நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்த நந்தகுமார் மற்றும் பாண்டி என்பதும், இவர்கள் இருவரும் வத்ராப்பில் (வத்திராயிருப்பு) இருக்கும் இந்து மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயன்று வந்ததும் தெரியவந்துள்ளது.

லேசான காயமடைந்தோர் வத்ராப் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலத்த காயமடைந்தோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 35 க்கும் அதிகமான பயணிகள் பேருந்தில் சம்பவத்தின்போது பயணித்து இருக்கின்றனர்.

இவர்களில் 20 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.