Wife And Daughters Suicide Attempt: மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்த கணவர்; மனைவி, மகள்கள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி..!
விழுப்புரத்தில் மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு செய்து வந்த கணவரால், மனமுடைந்து மனைவி மற்றும் 3 மகள்கள் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 08, விழுப்புரம் (Viluppuram News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே உள்ள புத்தகரம் மதுரா சீனங்கொட்டாய் பகுதியில் வசித்து வரும் தம்பதி வேடியப்பன் (வயது 40)-ராஜேஷ்வரி (வயது 33). இவர்களுக்கு சரண்யா (வயது 18), புனிதா (வயது 16), கோபிகா (வயது 13) என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். Explosed Apartment: அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது தளத்தில் வெடிவிபத்து – 3 பேர் பலி..!
வேடியப்பனுக்கு மது அருந்தும் பழக்கம் (Drinking Habit) அதிகமாக இருந்துள்ளது. இவர் அடிக்கடி வீட்டில் தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவும் இதற்காக தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அவரது மனைவி ராஜேஷ்வரி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மூன்று மகள்களும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளனர். உடனடியாக வந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து நல்லாண்பிள்ளைபெற்றாள் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.