Wife Bites Husband's Ear in UP (Photo Credit: @ndtv X)

செப்டம்பர் 25, கான்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், கான்பூரை (Kanpur) சேர்ந்த தம்பதி அமித் சோன்கர் - சரிகா. இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு (Family Dispute) ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி இரவு நடந்த கடுமையான வாக்குவாதத்தில், மனைவி சரிகா தனது கணவரின் வலது காதை கடித்து கிழித்ததில் அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. காதலியை கொன்றுவிட்டு, வாலிபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

கணவர் குற்றச்சாட்டு:

இதுகுறித்து கணவர் அமித் சோன்கர் கூறுகையில், 'என் மனைவி எனது வலது காதை பற்களால் கடித்துவிட்டாள். என்னுடன் வாழ அவருக்கு விருப்பமில்லை. பணமும் வீடும் கிடைத்தவுடன் என்னை விட்டு வெளியேறும்படி தொடர்ந்து வற்புறுத்துகிறார். நாங்கள் ஏழைகள், சந்தையில் காய்கறிகள் விற்று பிழைக்கிறோம். அவ்வளவு பணம் எங்கிருந்து கிடைக்கும்?' என்று கூறினார். சம்பவ நாளன்று, தான் ஒரு சோபாவில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​தனது மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் என் வலது காதை பற்களால் கடித்து கிழித்தார். மேலும், தனது மனைவி தன்னை கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார்.

விவாகரத்து வழக்கு:

தற்போது, ​​இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், காதில் பலத்த கட்டு கட்டப்பட்டிருந்த கணவர், தனது மனைவி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். மனைவியும், தன் மீது வன்முறையைக் குற்றம் சாட்டி, கணவர் மீது எதிர் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், கணவன் - மனைவி இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.