ஏப்ரல் 08, பாரிஸ் (World News): பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸ் அருகே உள்ள அரொன்சிண்ட்மெண்ட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில், பலர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், 8 மாடிகளை கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீரென 7-வது தளத்தில் வெடிவெடித்து விபத்து (Explosion) நிகழ்ந்துள்ளது. வெடி விபத்தில் தீ மளமளவென பற்றி எரிந்து குடியிருப்பில் பரவியது. Grandmother Murder: குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து தகராறு; பாட்டியின் கழுத்தை நெரித்து கொலை – பேரன் வெறிச்செயல்..!

இதனையடுத்து, இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இந்த தீ விபத்திற்கான காரணம் என்னவென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.