செப்டம்பர் 24, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் முகமது சையத் (வயது 70). இவர், கண்டிவாலியில் உள்ள சர்கோப்பில் உள்ள அரசு தொழில்துறை எஸ்டேட்டில் உலோக தொழிற்சாலை வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி சொத்து தகராறில் ஒப்பந்த கொலையாளியை பணியில் அமர்த்தியை அவரது மகன் தனது தொழிலதிபர் தந்தையை கத்தியால் குத்திக் கொன்றார். இதன்பின்னர், உயிரிழந்த தொழிலதிபரின் மகனையும் அவரது கூட்டாளியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், ஒருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். Viral Video: மேலதிகாரியை பெல்ட்டால் தாக்கிய தலைமை ஆசிரியர்.. சிசிடிவி காட்சி உள்ளே..!
தொழிலதிபர் கொலை:
இதுகுறித்த விசாரணையில், சம்பவ நாளன்று காலை, சையத் வழக்கம் போல் தனது வீட்டிற்குச் சென்றார். மதியம் 12 மணியளவில், அவர் பல கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்ததாக தகவல் கிடைத்தது. விசாரணையின் போது, காலையில் 2 பேர் தொழிற்சாலை வளாகத்திற்குள் நுழைந்ததை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீஸார் உறுதிப்படுத்தினர். அவர்கள் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் உள்ளே இருந்துள்ளனர். பின்னர், சையத்தை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு (Businessman Murder), ஆயுதத்தை தொழிற்சாலைக்குள் இருந்த தண்ணீர் தொட்டியில் வீசியது விசாரணையில் தெரியவந்தது.
இருவர் கைது:
இதனைத்தொடர்ந்து, நவி மும்பையை சேர்ந்த முகமது இஸ்லாம் (வயது 26), மூத்த மகன் ஹமீத் சையத் (வயது 41) மற்றும் அவரது தொழில் கூட்டாளியும் நெருங்கிய நண்பருமான ஷானு சவுத்ரி (வயது 40) ஆகியோர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. நீண்டகால நிதி தகராறுதான் கொலைக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஹமீத்துடன் இணைந்து சையத்தின் கண்ணாடி தொழிற்சாலையில் சவுத்ரி சுமார் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தார். இருப்பினும், சையத் லாபத் தொகையைப் பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அவரது மகன் ஹமீத் மற்றும் நண்பர் சவுத்ரி ஆகிய இருவரும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். பின்னர், கொலை செய்ய ஒப்பந்த கொலையாளி முகமது இஸ்லாமுக்கு ரூ.6.5 லட்சம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.