Work from Office: பணியாட்கள் அலுவலகத்திற்கு வந்தால் ஊதியம், பதவி உயர்வு; இந்திய தலைமை செயல் அதிகாரிகள் திட்டம்.!

முந்தைய ஆண்டுகளின் வளர்ச்சியை கணக்கிடும்போது, எதிர்பார்த்த அளவு இலக்கு உயரவில்லை எனினும், கடந்த ஆண்டை விட குறைவு இல்லை என்ற நிலை பெரு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Office Work (Photo Credit: Pixabay)

அக்டோபர் 24, புதுடெல்லி (Technology News): உலக அளவில் மக்களை வாட்டி வதைத்த கொரோனா காரணமாக பல ஐடி மற்றும் கணினி சார்ந்த தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவரும் வீட்டில் இருந்து வேலை பார்க்க அறிவுறுத்தப்பட்டனர்.

இதனால் தொழில் நிறுவனங்கள் பணியாளர்களின் நலனுக்காக ஏற்படுத்தித்தந்த வசதிகள் அனைத்தும் பணியிடத்தில் நிறுத்தப்பட்டதால், தொழில் நிறுவனங்களுக்கு இலாபம் இருப்பு இருந்தது.

ஆனால், முந்தைய ஆண்டுகளின் வளர்ச்சியை கணக்கிடும்போது, எதிர்பார்த்த அளவு இலக்கு உயரவில்லை எனினும், கடந்த ஆண்டை விட குறைவு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கடந்து ஒரு சில பெரு நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை மீண்டும் நிறுவனத்திற்கே அழைத்துள்ள சூழலில், பல முதலாளிகளும் அதனையே விரும்புவதாக தற்போது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. Russian President Health Status: மாரடைப்பால் படுக்கையறையில் மயங்கி கிடந்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்; பகீர் தகவல் வெளியானது.!

சர்வதேச அளவில் 1,300 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கலந்து கொண்ட உலகளாவிய வணிக ஆலோசனைக் கூட்டத்தில், 125 தலைமைச் செயல அதிகாரிகள் இந்தியாவைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

இதில், இந்தியாவைச் சார்ந்த செயல் அதிகாரிகள் தங்களது நிறுவன பணியாளர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வந்தால், அவர்களுக்கு பதவி உயர்வு, கூடுதல் சம்பளம், அவர்களுக்கு சாதகமாக செயல்படுதல் உட்பட பல்வேறு விஷயங்களை ஊக்கமாக கொடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட நிறுவனங்களில் கடந்த 2022 ஆம் ஆண்டு வளர்ச்சி பட்டியல் மற்றும் 2023 ஆம் ஆண்டு வளர்ச்சி பட்டியலை நோக்கும் போது பெருமளவு வித்தியாசம் இல்லாத நிலையில், மீண்டும் பணியாளர்களை தொழில் நிறுவனங்களுக்கு அழைத்து, அவர்களை நேரில் ஊக்கப்படுத்துவதன் மூலமாக நிறுவனத்தின் வளர்ச்சி மேம்படும் என்று செயல் அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரியவருகிறது.