Aditya L1 Update: நான்காவது புவிவட்டப்பாதை உயர்வையும் வெற்றிகரமாக கடந்தது ஆதித்யா எல்1; ஜனவரி 2024ல் சூரியனை நெருங்கும்.!
சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆதித்யா விண்கலம், புவியின் சுற்றுவட்டப்பாதை உயர்வு நான்கிலும் வெற்றியடைந்தது.
செப்டம்பர் 15, பெங்களூர் (Technology News): நிலவை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 செயற்கைகோள், சர்வதேச அளவிலான நாடுகள் இந்தியாவை உற்றுநோக்கும் வகையில் மாபெரும் சரித்திர சாதனை படைத்தது.
உலகின் எந்தவொரு நாடும் சென்றடையாக நிலவின் தென்துருவ பகுதியில் சந்திராயனை அனுப்பி, அங்கு பல தனிமங்கள் இருப்பதாய் உலகுக்கு வெளிப்படுத்தி இருந்தது. அதனைத்தொடர்ந்து, சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக இஸ்ரோ ஆதித்யா விண்கலத்தை ஏவியது. Bihar Shocker: படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 12 குழந்தைகள் உயிரிழந்ததாக அறிவிப்பு; பீகாரில் சோகம்.. பெற்றோர் கண்ணீர்.!
Aditya L1 என பெயரிடப்பட்ட விண்கலம், கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. அதனைத்தொடர்ந்து, செப். 3, 5, 10ம் தேதிகளில் முதல் மற்றும் மூன்று சுற்றுவட்டப்பாதை தொடர்ந்து உயர்த்தப்பட்டது.
தற்போது வெற்றிகரமாக 4 வது சுற்றுவட்டப்பாதையும் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தகவலை இஸ்ரோ அறிவித்து உறுதி செய்துள்ளது. ஆதித்யா விண்கலம் சூரியனுக்கு அருகில் ஜனவரி 2024 அன்று சென்றடையும்.