Thanjavur Murder Case (Photo Credit : Youtube)

அக்டோபர் 11, தஞ்சாவூர் (Thanjavur News): தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரியகோட்டை கோபாலசமுத்திரம் பகுதியில் வசித்து வருபவர் வினோத்குமார் (வயது 38). இவரது மனைவி நித்யா (வயது 35). தம்பதிக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். வினோத் குமார் டிரைவராகவும், பகுதி நேர புகைப்பட கலைஞராகவும் வேலை பார்த்து வருகிறார். தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், நித்யாவுக்கு மன்னார்குடியை சேர்ந்தவருடன் சமூக வலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது கள்ளக்காதலாக மாறவே, தனது குழந்தைகளையும், கணவரையும் மறந்து கள்ளக்காதலனே உலகம் என வாழ்ந்து வந்துள்ளார். Gold Silver Rate: ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்.. டஃப் கொடுக்கும் வெள்ளி.. இல்லத்தரசிகளை அதிரவைத்த விலை நிலவரம்.!

கள்ளக்காதலனுடன் கம்பி நீட்டிய மனைவி:

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக குடும்பத்தை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் சென்றுள்ளார். இதனால் தனியாக குழந்தைகளை கவனித்து வந்த வினோத்குமார், சமீபத்தில் மனைவியை சந்தித்து மீண்டும் தன்னுடன் வந்து வாழுமாறு அழைத்துள்ளார். குழந்தைகளை எண்ணி மனம் இறங்குமாறும் கதறி உள்ளார். ஆனால் நித்யா நான் என் காதலனை விட்டு வரமாட்டேன் என மறுக்கவே மன வேதனை அடைந்தார். மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த வினோத்குமார் மதுவுக்கு அடிமையாகியுள்ளார். மேலும் குழந்தைகளை வெறுத்து திட்டி வந்துள்ளார். சம்பவத்தன்று மது மற்றும் கஞ்சா போதையில் இருந்தவர் குழந்தைகளுக்கு பக்கோடா வாங்கி வந்துள்ளார். அதனை சாப்பிட்டு முடித்ததும் மகள்களை வெளியே சென்று விளையாடுமாறு சண்டையிட்டவர், ஆண் குழந்தையை கொஞ்சுவது போல அழைத்து மடியில் படுக்க வைத்து கழுத்தை அறுத்துள்ளார்.

பக்கோடா கொடுத்து குழந்தைகளை கொன்ற தந்தை:

பின் பெண் குழந்தைகளையும் அழைத்த நிலையில், தம்பியின் சடலத்தை கண்டு குழந்தைகள் கதறவே அவர்களின் கழுத்தையும் கரகரவென அறுத்து துடிக்கத் துடிக்க கொன்றுள்ளார். இதனை தொடர்ந்து காவல்நிலையத்திற்கு சென்றவர் தனது குழந்தைகளை கொன்றுவிட்டதாக சரணடைந்தார். இதைக்கேட்டு அதிர்ந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.