Airtel Denies Data Breach: 37.5 கோடி ஏர்டெல் பயனாளர்களின் தரவுகள் விற்பனையா..? ஏர்டெல் அதிகாரபூர்வ அறிவிப்பு..!
ஏர்டெல் பயனாளர்களின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக வந்த தகவலுக்கு, ஏர்டெல் நிறுவனம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜூலை 05, டெல்லி (Technology News): 37.5 கோடி ஏர்டெல் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை பிரபல ஹேக்கிங் தளத்தில் விற்பனைக்கு வைப்பதாக ஹேக்கர் ஒருவர் அறிவித்ததை அடுத்து, இன்று (ஜூலை 5) ஏர்டெல் இந்தியா, தரவு மீறல் பற்றிய செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ஏர்டெல் நிறுவனம், 'நாங்கள் ஒரு முழுமையான விசாரணையை தீவிரமாக மேற்கொண்டுள்ளோம். மேலும், ஏர்டெல் அமைப்புகளில் இருந்து எந்தவித மீறலும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறோம்' என தெரிவித்துள்ளது. Death By Poison Gas: கிணற்றில் இறங்கிய 5 பேர் விஷ வாயு தாக்கி பலி..! உறவினர்கள் சோகம்..!
டார்க் வெப் (Dark Web) தகவல் தொடர்பாளர் மூலம் தெரிய வந்ததாகக் கூறப்படும் தவறான தரவு மீறல், டார்க் வெப்பில் யார் என்ன பதிவு செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கும், 'xenZen' என்ற மாற்றுப்பெயருடன் ஹேக்கர் ஒருவர் 37.5 கோடிக்கும் அதிகமான ஏர்டெல் இந்தியா வாடிக்கையாளர்களின் ஆதார் ஐடி, மின்னஞ்சல் ஐடி மற்றும் பல விபரங்களை உள்ளடக்கிய தரவுத்தளத்தை விற்க முயன்றார் என்னும் குற்றச்சாட்டுக்கு ஏர்டெல் நிறுவனம் அதிகாரபூர்வமாக மறுப்பு தெரிவித்து, அதன் X-தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.