Well | Death File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 05, ராய்ப்பூர் (Chhattisgarh News): சத்தீஸ்கர் மாநிலம், ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள கிகிர்டா கிராமத்தில் அமைந்துள்ள கிணற்றில், இன்று காலை ராம்சந்திர ஜெய்ஸ்வால் என்பவர் கிணற்றில் விழுந்த மரக்கட்டையை எடுப்பதற்காக கிணற்றில் இறங்கியுள்ளார். உள்ளே இறங்கிய சற்று நேரத்தில் மயக்கம் (Poisonous Gas) வருவதாக கூறி, அருகில் இருந்த உறவினர்களை அழைத்துள்ளார். அவரை மீட்பதற்காக, ரமேஷ் படேல், ராஜேந்திர படேல் மற்றும் ஜிதேந்திர படேல் ஆகிய 3 பேரும் கிணற்றில் இறங்கி மயக்கம் அடைந்துள்ளனர். Samsung Galaxy Z Fold 6: சாம்சங் கேலக்ஸி Z போல்ட் 6 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்..! முழு விவரம் இதோ..!

இதனையடுத்து உள்ளே சென்ற 4 பேரும் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சந்திரா என்பவரும் உள்ளே இறங்கி, அவரும் மயக்கமடைந்துள்ளார். இதுகுறித்து, உள்ளூர் கிராமவாசிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் கிணற்றில் மயக்கம் போட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதற்கட்ட விசாரணையில், கிணற்றில் விஷ வாயு தாக்கி இவர்கள் 5 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.