AI School in Kerala: செயற்கை தொழில்நுட்பத்தை கையில் எடுத்த கேரளபள்ளி: முன்னாள் பிரதமர் துவங்கி வைத்தார்..!

சவால் நிறைந்த உலகை மாணவர்கள் துணிவுடன் எதிர்கொள்ள பாடத்திட்டத்துடன் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கற்றலை அறிமுகப்படுத்துகிறது கேரள பள்ளி.

Artificial Intelligence (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 25, திருவனந்தபுரம் (Technology News): செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் வேகமாக ஊடுருவி வருகிறது. இந்த தொழில்நுட்பம் மருத்துவத்துறைக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது. இதற்கு உதாரணமாக  அமெரிக்காவில் பல ஆண்டுகளாக பக்கவாதத்தால் முடங்கிக் கிடந்த பெண்ணை இந்த  தொழில்நுட்பம் பேச வைத்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

இந்த சூழலில் கடந்த 22 ஆம் தேதி  கேரளாவில் ஏஐ பள்ளியை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். இந்த பள்ளியில் ஆசிரியர்கள் போக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் மாணவர்களுக்கு பாடம் எடுக்கப் போவதாக கூறப்படுகிறது. BCCI Warning: "தனிப்பட்ட தகவலை பொதுவெளியில் பகிர வேண்டாம்" - விராட் கோலியின் செயலால் உச்சகட்ட எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ.!

மாணவர்களின் கல்வி கற்கும் முறையை மேம்படுத்துவதற்காக திருவனந்தபுரத்தில் இருக்கும் சந்திரகிரி வித்யா பவன் பள்ளி இந்த தொழில்நுட்பத்தை கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மாணவர்களின்  தனித்துவமான கற்றல் முறைக்கு  இந்த தொழில்நுட்பம் உதவியாக இருக்கும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவிக்கிறது.

இந்தப் பள்ளியின் 8-12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஏஐ  தொழில்நுட்பத்தின் வாயிலாக கற்றல் அனுபவத்தை பெற இருக்கின்றனர். நேர்காணல், குழு விவாதம் , கணிதத்தில் வல்லமை பெறுவது போன்றவற்றிருக்குதொழில்நுட்பம் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மாணவர்களின் மேற்படிப்பு, வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் தரும் உதவித்தொகை, கொன்செலிங் போன்ற தகவலை இந்த தொழில்நுட்பம் மாணவர்களுக்கு வழங்கும் என்று கூறப்படுகிறது.