Pregnancy Robot (Photo Credit : @nypost / @zeee_media X)

ஆகஸ்ட் 18, சிங்கப்பூர் (Technology News): மனிதர்கள் தொழில்நுட்பத்தின் மீதான பேரார்வம் காரணமாக தொடர்ந்து பல்வேறு வகையான புதிய கண்டுபிடிப்புகளை உலக அளவில் அறிமுகம் செய்து வருகின்றனர். மனிதர்களின் செயல்களை எளிமையாக்கவும், எதிர்கால சந்ததிக்கு பேருதவி புரியும் வகையிலும் புதிய தொழில்நுட்பங்கள் வருகின்றன. இந்நிலையில் கர்ப்பம் தரித்து 10 மாதங்கள் குழந்தையை பெற்றெடுப்பது போல மனித உருவ ரோபோக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கின்றனர். WhatsApp Update: இனி வாட்ஸ்அப்பில் ஈசியாக எழுத்துப்பிழைகளை சரி செய்யலாம்.. வரப்போகும் அசத்தல் அப்டேட்.! 

10 மாதம் கருவை சுமந்து குழந்தையை பெற்றெடுக்கும் ரோபோக்கள் :

சிங்கப்பூரில் இருக்கும் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உலகில் முதல் கர்ப்ப ரோபோ உருவாக்கப்பட்டு வருகிறது. இது இன்குபேட்டர் போல அல்லாமல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயற்கை கருப்பையை கொண்டு செயல்படும் எனவும் சொல்லப்படுகிறது. செயற்கையான அம்னோடிக் திரவம் நிரப்பப்பட்ட கருப்பை மனித கருப்பை போல செயல்படும். மனிதனின் வாழ்க்கையில் கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை அனைத்து செயல்முறையும் ரோபோ செய்யும் என சொல்லப்படுகிறது.

குழாய்கள் மூலம் அனுப்பப்படும் ஊட்டச்சத்துக்கள் :

அதேபோல குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் குழாய்கள் மூலம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் செயற்கை கருப்பை புதிய முறை இல்லை என்றும் முன்னதாகவே பயோ பேக் முறையில் சோதனை அடிப்படையில் ஆட்டுக்குட்டி ஒன்று பெற்றெடுக்கப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு கர்ப்ப ரோபோக்களின் மாதிரி உருவாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.