Twitter (X) Audio Call: எலான் மஸ்க் வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு: இனி போன் நம்பர் இல்லாமல் கால் பண்ணலாம்..!

அதில் அவர் ட்விட்டர் வலைதளத்தை பயன்படுத்துபவர்கள் போன் நம்பர் இல்லாமலே ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Elon Musk (Photo Credit: Wikipedia)

ஆகஸ்ட் 31, கலிபோர்னியா (Technology News): கடந்த ஆண்டு எலான் மஸ்க் ட்விட்டர் (Twitter) நிறுவனத்தை வாங்கியதிலிருந்து, அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் பாரம்பரிய  சின்னமான பறவை படத்தை மாற்றி, தனக்கு பிடித்த எக்ஸ் (X) என்ற ஆங்கில எழுத்தை லோகோவாக மாற்றினார். மேலும், ஊழியர்கள் பணி நீக்கம் மற்றும் ப்ளூ டிக் சப்ஸ்கிரிப்ஷனை (Blue Tick Subscription) கட்டண சேவை ஆக்கியது என பல மாற்றங்களை எலான் மஸ்க் கொண்டு வந்தார்.

சீனா தொழில்நுட்ப செயலிகள் (Chinese Applications) போலவே பணப்பரிவர்த்தனை (Money Transactions) ,சமூக வலைதளங்கள் (Social Media)  என வெவ்வேறு சேவைகளை ஒரே செயலியில் உள்ளடக்கும் முறையும் விரைவில் அறிமுகமாக இருப்பதாக தெரிகிறது.

எலான் மஸ்க் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் ட்விட்டர் தளத்தை பயன்படுத்துபவர்கள், அதிலேயே தங்களுக்கு வேண்டிய ஆடியோ மற்றும் வீடியோ கால்களை செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.

மேலும், இந்த வசதி ஆண்ட்ராய்டு (Android), ஐஓஎஸ் (IOS) மொபைல்கள், மேக் (Mac) மற்றும் பிசி (PC) போன்ற டிவைஸ்களிலும் செயல்படும் விதமாக இருக்கும் என்று தெரிவித்தார். ட்விட்டர் ஒரு உலகளாவிய முகவரி பதிவாக செயல்படுவதால், அதிலிருந்து கால் செய்வதற்கு நம்பர் எதுவும் தேவைப்படாது என்று தெரிவித்துள்ளார்.