Blackmail Audio Launch (Photo Credit: @narasingaraja5 X)

ஜூலை 21, சென்னை (Cinema News): பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், 'பிளாக்மெயில்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மு.மாறன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் தேஜு அஸ்வினி, பிந்து மாதவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜேடிஎஸ் பிலிம் ஃபேக்டரி சார்பில் அமல்ராஜ் தயாரிப்பில், சாம் சி.எஸ் இசையில் இப்படம் தயாராகி உள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் 01ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. Director Velu Prabhakaran Passes Away: இயக்குநர் வேலு பிரபாகரன் மறைவு.. பிரபலங்கள் இரங்கல்..!

ஜிவி பிரகாஷ் செய்த உதவி:

இந்நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஜூலை 20) நடைபெற்றது. இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், வசந்தபாலன், ஆதிக் ரவிச்சந்திரன், தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர். இப்படத்தின் தயாரிப்பாளர் அமல்ராஜ் பேசுகையில், “இப்படத்தின் கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு முதலில் என் நன்றி. படப்பிடிப்பு முடிந்து கடைசி 8 நாட்கள் ஷூட்டிங் முடியாமல் இருந்தது. அதற்கு உறுதுணையாக இருந்து ஜி.வி.பிரகாஷ் பல உதவிகளை செய்துள்ளார். இப்படத்துக்காக அவர் பாதி சம்பளம்தான் வாங்கியுள்ளார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் டப்பிங் பணிகளை முடித்து இசை வெளியீடு விழா வரை அவர் வந்துள்ளார். அவருக்கு என்றுமே நான் கடமை பட்டிருக்கிறேன்” என அவர் பேசினார்.