School Teacher Arrested for Semi Nude Video Call With Student (Photo Credit : Pixabay)

ஜூலை 30, நவி மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் 16 வயது சிறுவனுடன் தனிமையில் இருந்ததாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த விஷயம் அம்மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுடன் ஆசிரியைகள் பாலியல் உறவில் இருந்ததாக பல புகார்கள் எழுந்து குற்ற செயலில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது செய்யப்பட்டது அதிகம் நடந்து வந்தது.

இந்தியாவில் தொடரும் அவலம் :

இந்நிலையில் தற்போது இது தொடர்பான விஷயங்கள் இந்தியாவிலும் பரவலாக நடக்க தொடங்கியுள்ளது பெற்றோர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவிமும்பை பகுதியில் வசித்து வரும் 35 வயதுடைய ஆசிரியை தன்னிடம் பயின்று வரும் 16 வயது மாணவருடன் பேசி வந்துள்ளார். மாணவரிடம் சமூகவலைதளங்களில் பழக்கத்தை ஏற்படுத்திய ஆசிரியை, மாணவரை தனது வலையில் வீழ்த்த பல நூதன முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். Shocking Video: 15 மாத குழந்தையை தெருவில் தவிக்கவிட்டு இன்ஸ்டா காதலனுடன் தப்பிய தாய்.! 

அரை நிர்வாணமாக மாணவனுக்கு வீடியோ கால் செய்த ஆசிரியை :

முதலில் இருவரும் சாதாரணமாக பேசி வந்த நிலையில், பின்னாளில் வீடியோகால் செய்யும் பழக்கத்தையும் கொண்டுள்ளனர். மாணவரிடம் நிர்வாணமாக தோன்றிய ஆசிரியை அந்தரங்க உறுப்புகளை காண்பித்து ஆபாசமாக பேசியுள்ளார். இந்த செயலை அவர் கடந்த பல மாதங்களாக அரங்கேற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மாணவரின் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உணர்ந்து பெற்றோர் அவரை கண்காணித்தபோது ஆசிரியையின் அதிர்ச்சி செயல் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக அங்குள்ள காவல்நிலையத்தில் ஆசிரியருக்கு எதிராக புகாரளிக்கவே, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.