Google Big Layoff?: 30 ஆயிரம் பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்கிறது கூகுள்?; அச்சத்தில் பணியாளர்கள்.!

சர்வதேச அளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக இருக்கும் கூகுள், அடுத்தபடியாக தனது ஊழியர்களின் பணிநீக்க நடவடிக்கைக்கு தயாராகி இருக்கிறது.

Google Layoff (Photo Credit: Wikipedia / Pixabay)

டிசம்பர் 24, கலிபோர்னியா (Technology News): தற்போதைய தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் எதிர்காலத்திற்கு தேவையான நுண்ணறிவு திறன் கணினிகளை அதிகளவு உருவாக்கி வருகிறது. இதற்காக பல நிறுவனங்கள் தொடர்ந்து தங்களின் படைப்புக்களை அறிமுகம் செய்து வருகிறது. கடந்த 1996ம் ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டு, இன்று எந்த தகவல் வேண்டுமானாலும் தன்னிடம் கிடைக்கும் என்ற வகையில், தகவல்களை திரட்டி வைத்துள்ள கூகுள், தொடர்ந்து எதிர்காலத்திற்கான பல்வேறு செயலிகள் குறித்து ஆராய்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு திறன்களையும் அறிமுகம் செய்துள்ளது. தனது எலக்ட்ரானிக் படைப்புகளை அறிமுகம் செய்கிறது.

கூகுள் நிறுவனம்: சர்வதேச அளவில் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக இருக்கும் கூகுள் (Google) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார். உலகளவில் கூகுள் நிறுவனத்தின் கீழ் நேரடியாக 139,995 பேர் பணியாற்றி வருகிறார்கள். உலகளவில் ஏற்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வரவேற்பின் காரணமாக, பலரும் தங்களின் பணியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். Chennai RMC Statement: சென்னை வானிலை ஆய்வு மையம் மீது வைக்கப்பட்ட சரமாரி குற்றசாட்டுகள்: விளக்கம் அளித்த நிர்வாகம்.! 

Google CEO Sundar Pichai (Photo Credit: ANI)

பணிநீக்க நடவடிக்கை: கூகுள் நிறுவனம் நடப்பு ஆண்டில் தனது 12 ஆயிரம் பணியாளர்களை இரவோடு இரவாக வேலையில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டு அதிர்ச்சி கொடுத்தது. தற்போது, அதன் பணியாளர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தியாக 30 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்ய வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பணிநீக்கம் தொடர்பாக முன்னதாக பேசும்போதே, நிறுவனத்தின் எதிர்காலம் கருதி எடுக்கப்படும் முடிவுகள் சில நேரம் மனதை வருந்தவும் வைக்கிறது என்றும் தெரிவித்து இருந்தார்.

மனித உழைப்புக்கு பதில் தொழில்நுட்பம்: இவ்வாறான தருணத்தில் ஏஐ (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் தொழில்நுட்ப அறிமுகத்தால், கூகுள் தனது 30 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை தந்துள்ளது.