செப்டம்பர் 30, சென்னை (Cricket News): ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை (ICC Women's World Cup) கிரிக்கெட் தொடர் இன்று (செப்டம்பர் 30) முதல் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஸ்ரீலங்கா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் இந்த தொடர் 02 நவம்பர் 2025ல் நிறைவு பெறுகிறது. இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி - இலங்கை பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team - Sri Lanka Women's National Cricket Team) மோதுகின்றன. இன்று கவுகாத்தியில் உள்ள பரஸ்பரா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் ஆட்டம் தொடங்கி நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வென்று சாதனை படைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. Arattai App: வாட்ஸ்அப்புக்கு சவால் விடும் அரட்டை செயலி.. நவம்பரில் மாஸ் அப்டேட்.!
மகளிர் உலகக்கோப்பை 2025 கூகுள் சிறப்பு டூடுல் :
இதனிடையே மகளிர் உலகக்கோப்பை 2025ஐ முன்னிட்டு கூகுள் நிறுவனம் (Google Doodle) தனது சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. கூகுள் வெளியிட்டுள்ள டூடுல் கிரிக்கெட்டை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி Google என்ற சொல்லில் உள்ள இரண்டு 'O' எழுத்துக்களுக்கு பதிலாக பேட் மற்றும் பந்தின் வடிவம் இடம் பெற்றுள்ளது. 'L' எழுத்தானது விக்கெட்டுகளை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் தனது டூடுல் சிறப்பு குறித்தும் தகவல் தெரிவித்துள்ளது. அந்த பதிவில், "2025 ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பையின் தொடக்கத்தை கொண்டாடும் விதமாக டூடுல் உருவாக்கப்பட்டுள்ளது. போட்டியின் அனைத்து வீரர்களுக்கும், அணிகளுக்கும் நல்வாழ்த்துக்கள்!" என தெரிவித்துள்ளது.
கூகுள் டூடுலுடன் தொடங்கிய மகளிர் உலகக்கோப்பை 2025 (Women's Cricket World Cup Doodle Today):
Google celebrates the Women's Cricket World Cup with a doodle. pic.twitter.com/tIdUQbkZm1
— Izu (@outof22yards) September 30, 2025