![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/12/Chennai-RMC-Photo-Credit-@Chennai_rmc-X-imd.gov_.in_-380x214.jpg)
டிசம்பர் 24, சென்னை (Chennai): "திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த பெருமழை தொடர்பாக வானிலை ஆய்வு (Regional Meteorological Center) மையம் முன்னதாகவே எச்சரிக்கவில்லை. ஆய்வு மையம் எச்சரிக்கை விடுப்பதற்கு முன்னதாகவே, அங்கு பெருமழை கொட்டி தீர்ந்துவிட்டது. வானிலை ஆய்வு மையத்திடம் நவீனமயமான கருவிகள் ஏதுமில்லை" என்று அரசுத்துறை நிர்வாகம் முதல் எதிர்கட்சிகள் வரை சென்னை வானிலை ஆய்வு மையம் மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்த மையம்: தென் மாவட்டத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழைப்பொழிவு காரணமாக வானிலை ஆய்வு மையத்தின் மீதான குற்றசாட்டு, தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாகவும் மாறியது. இதனால் சென்னை வானிலை ஆய்வு மையம், நேற்று தனது தரப்பிலிருந்து ஒரு விளக்க குறிப்பையும் வெளியிட்டு இருக்கிறது.
உலகத் தரத்திற்கு ஈடான கருவிகள்: அந்த பதிவில், "சென்னை வானிலை மையம் நவீனமாக இல்லாமல் இருப்பதாக தவறான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இந்திய வானிலைத் துறையில் பயன்பாட்டில் இருக்கும் அதிவேக கணினிகள், இஸ்ரோ செயற்கைக்கோள் வசதிகள், ரேடாரார்கள், தானியங்கி வெப்பநிலை சேகரிப்பான்கள் போன்றவை உலகத் தரத்திற்கு ஒப்பானவை ஆகும். சென்னை மண்டல வானிலை மையத்திலும் இந்த கருவிகளை பயன்பாட்டில் இருக்கின்றன. Woloo Powder Room: பெண்களுக்காக மத்திய இரயில்வேயின் அசத்தல் முயற்சி: உலகத்தரத்தில் நவீனமயமான கழிவறை அறிமுகம்.. முழு விபரம் இதோ.!
![](https://tmst1.latestly.com/wp-content/uploads/2023/12/South-India-Rains-Photo-Credit-Facebook-1.jpg)
சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்கள்: சென்னை வானிலையை கண்காணிக்க இரண்டு டாப்ளர் ரேடார்களும், தென் தமிழகத்தை கண்காணிக்க மூன்று டாப்ளர் ரேடார்களும் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றில் எக்ஸ் பாண்டு (X Bond Type Weather Radar) வகை ரேடார் இஸ்ரோவின் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
முந்தைய புயல் அறிவிப்புகள்: உலக வானிலை அமைப்பே இந்திய வானிலை ஆய்வு துறையின் கட்டமைப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றை உலக தரத்துடன் இருப்பதாக பாராட்டி இருக்கிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட வர்தா, கஜா, நிவர், மாண்டோஸ், மிக்ஜாம் உட்பட பல்வேறு புயல்களின் போது வானிலை மையத்தின் முன்னெச்சரிக்கை அறிவிப்பு பெருமளவு உயிர் சேதத்தை தவிர்த்தது.
இழிவுபடுத்தி, புண்படுத்த வேண்டாம்: இந்நிலையில், ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு பதிலாக சென்னை வானிலை மையத்தை இலக்காக வைத்து செய்யப்படும் விமர்சனங்கள், அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் தமிழக மாநில வானிலை மைய பணியாளர்களை புண்படுத்தும் விதமாகவும், இந்திய தொழில்நுட்பத்தை இழிவுபடுத்தும் விதமாக இருக்கிறது. அத்தகைய தவறான விமர்சனங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.
Press Release from Regional Meteorological Centre, Chennaihttps://t.co/QuMuk0tRm8 pic.twitter.com/W95Dx2Poq6
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 23, 2023