Google Pay Charges on Mobile Recharge: கூகுள் பே பயன்படுத்துவோரின் கவனத்திற்கு.. மொபைல் ரீசார்ஜ்களுக்கு இனி 3 ரூபாய் கட்டணம்.!!

கூகுள் பே தனது பிளாட்ஃபார்மில் மொபைல் ரீசார்ஜ்களுக்கு ரூ.3 கட்டணமாக வசூலிக்கத் தொடங்கியுள்ளது.

Google Pay (Photo Credit: @niharika_kamal X)

ஜனவரி 23, புதுடெல்லி (New Delhi): யுபிஐ (UPI) சேவையைப் பயன்படுத்தி தங்கள் மொபைல் ஃபோன்களை ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்களுக்கு கூகுள் பே (Google Pay) ரூ.3 என்ற கட்டணமாக வசூலிக்கத் தொடங்கியுள்ளது. அதே நேரம் 100 ரூபாய்க்கும் குறைவான ரீசார்ஜ் பிளான்களுக்கு எந்த ஒரு கன்வீனியன்ஸ் கட்டணமும் வசூலிக்கப்படாது. ஆனால் 200 ரூபாய் வரையிலான ரீசார்ஜ்களுக்கு 2 ரூபாயும், 300 ரூபாய் வரையிலான ரீசார்ஜ்களுக்கு 3 ரூபாயும் வசூலிக்கப்படும். மேலும் 300 ரூபாய்க்கும் அதிகமான தொகையிலான ட்ரான்சாஷன்களுக்கு 3 ரூபாய் கன்வீனியன்ஸ் கட்டணம் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Fire Accident at Poultry Farm: விழுப்புரத்தில் பயங்கரம்... கொத்து கொத்தாக கோழிகள் கருகி சாவு..!