Hero Cycles on Walmart: வால்மார்ட்டில் காட்சிப்படுத்தப்பட்ட ஹீரோ நிறுவனத்தின் சைக்கிள்: மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அசத்தல்.!

மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஹீரோ சைக்கிளை, வால்மார்ட்டில் காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்சித் சிங் சித்து தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

Made In India Cycle at Walmart (Photo Credit: @ANI X)

டிசம்பர் 13, வாஷிங்க்டன் டிசி (Technology News): இந்திய தயாரிப்புகளை ஊக்குவிக்கும் பொருட்டும், புதிய உள்நாட்டு கண்டுபிடிப்புகளை அதிகப்படுத்துவதற்கும் மேக் இன் இந்தியா (Make In India) திட்டமானது மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்ட பல்வேறு புதிய பொருட்கள் சர்வதேச அளவில் கவனத்தை பெற்று வருகின்றன.

80 நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்திய தயாரிப்பு: அந்த வகையில், சைக்கிள் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் இந்திய அளவில் பிரபலமான ஹீரோ நிறுவனம் (Hero Cycles). கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஹீரோ நிறுவனத்தின் சைக்கிள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைங்கப்படுகிறது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள தனது தொழிற்சாலையில் தயாரித்த மிதிவண்டியை அமெரிக்காவில் சந்தைப்படுத்தி இருக்கிறது.

வால்மார்ட்டில் ஹீரோ சைக்கிள்: அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதல் முறையாக தனது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து பத்து பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மிதிவண்டிகளை ஏற்றுமதி செய்ய இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. Parliament Attack: நாடாளுமன்றத்தில் கண்ணீர் புகை குண்டு வீசி திடீர் தாக்குதல்: பார்வையாளர்களாக வந்த இரண்டு பேர் அதிர்ச்சி செயல்.! 

இந்திய தயாரிப்பு: முன்னதாக ஹீரோ நிறுவனம் அமெரிக்கா உட்பட பிற நாடுகளுக்கு மிதிவண்டிக்கான பாகங்களை தயாரித்து வழங்கியது. 90 விழுக்காடு தயாரிப்புகள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் நிலையில், தற்போது ஹீரோ நிறுவனம் மிதிவண்டியை உருவாக்கி விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மேக் இன் இந்தியா: ஆடவர் மற்றும் பெண்கள் இயக்கும் வகையில், வெளிநாடுகளின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப ஹீரோ நிறுவனத்தின் சைக்கிள் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டு இருக்கின்றன. மேக் இன் இந்தியா திட்டத்தின் வாயிலாக, உலகை உருவாக்க தனது முயற்சியில் வெற்றிகண்டுள்ளதாக ஹீரோ தெரிவித்துள்ளது.