Parliament Attack (Photo Credit: @nabilajamal_ x)

டிசம்பர் 13, டெல்லி (Delhi): இந்திய பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்து இன்றுடன் 22 வருடங்கள் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் இதே நாளில் மீண்டும் மக்களவையில் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. இது இந்தியாவையே பரபரப்பு அடையச் செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

22வது ஆண்டு நினைவு நாள்: கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நாளில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் 5 பயங்கரவாதிகள் நுழைந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைவர் மீதும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்தனர். அதேநேரம் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் நடத்திய பதில் தாக்குதலில், அந்த ஐந்து பயங்கரவாதிகளும் இறந்தனர். இந்த பயங்கர தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த ஒன்பது பேருக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. Aarudhra Gold Trading Scam: ஆருத்ரா நிதிநிறுவனம் ரூ.2438 கோடி மோசடி விவகாரம் : பரப்பான வாக்குமூலம் கொடுத்த நடிகர் ஆர்.கே.சுரேஷ்!

குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உட்பட பலரும் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நாடாளுமன்ற தாக்குதல்: இந்நிலையில் இன்று 22 ஆண்டுகளுக்கு பின்பு, மீண்டும் அதே நாளில் நாடாளுமன்றத்தில் தாக்குதல் (Parliament Attack) நிகழ்ந்துள்ளது. இந்திய பாராளுமன்றத்தில் மக்களவையில் இன்று அலுவல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து திடீரென இரண்டு பேர் கூச்சலிட்டுக் கொண்டே அத்துமீறி உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்தனர். அவர்கள் கைகளில் கண்ணீர் புகை குண்டுகள் இருந்துள்ளன. சபாநாயகரை நோக்கி ஓடி வந்த அவர்கள், திடீரென்று புகை குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் அவையில் இருந்த அனைவரும் பயந்து ஓட ஆரம்பித்துள்ளனர். இருப்பினும் அத்துமீறிய அந்த இருவரும் சில உறுப்பினர்களால் பிடிக்கப்பட்டு பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். Wife Swapping Case In Bengaluru: மனைவியை நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்திய கணவர்: அனுதினமும் நடந்த கொடுமை.!

இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "2 இளைஞர்கள் திடீரென குதித்து உள்ளே வந்தனர். அவர்கள் ஏதோ ஒன்றை வீசினர். அதில் இருந்து வாயு வெளியேறியது. அவர்கள் இருவரையும் எம்.பி.க்களே வளைத்துப் பிடித்தனர். இதனால் சபை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இது பாதுகாப்பு அத்துமீறலாகும்" என்று கூறியுள்ளார். போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.