Infosys Narayan Murty and Akshata Murty: "மகளுடன் எளிமை" தந்தை - மகளாக ஐஸ்கிரீம் சாப்பிடும் இன்போசிஸ் நாராயண் மூர்த்தி & அக்ஷதா மூர்த்தி.!
செல்வங்கள் கோடிக்கணக்கில் இருந்தாலும், உலகமே வியக்கும் புகழ் கொண்டிருந்தாலும், எளிமை மற்றும் குணம் ஆகியவையே தொடர் வெற்றியை உறுதி செய்யும்.
பிப்ரவரி 13, பெங்களூர் (Bangalore): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், ஜெய்சங்கர் பகுதியில் பிரபலமான ஐஸ்கிரீம் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இந்த கடை புகழ்பெற்ற கடை என்பதால் சாதாரண நபர்கள் முதல் செல்வந்தர்கள் வரை பலரும் நேரில் அங்கு வந்து ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டு செல்வார்கள். இந்நிலையில், இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயண் மூர்த்தி, அவரது மகள் அக்ஷதா மூர்த்தி ஆகியோர் ஐஸ்கிரீம் சாப்பிட்ட காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. இவர்கள் இருவரும் இந்தியாவில் மிகப்பெரிய தொழிலதிபர்கள் ஆவார்கள். தந்தை - மகள் உறவுக்கு வெளியே, இவர்கள் சர்வதேச அளவில் கவனம்பெற்ற நபர்களும் ஆவார்கள். Kingdom Of the Planet of the Apes: "மனிதர்களை அடிமையாக்கி ஆட்சியை பிடிக்கும் மனிதக்குரங்குகள்" அசத்தல் காட்சிகளுடன் வெளியானது கிங்டம் ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ்.!
செல்வந்தர் ஆயினும் எளிமை: சாதாரண உடையில் மேலும், அக்ஷதா மூர்த்தி, இங்கிலாந்து நாட்டின் பிரதமராக பணியாற்றி வரும் ரிஷி சுனக்கின் மனைவி ஆவார். இதனால் அக்ஷதா இங்கிலாந்தின் முதல் பெண்மணியாகவும் கவனிக்கப்படுகிறார். இந்தியா மட்டுமல்லாது வெளிநாட்டிலும் இவர் தொழில் முனைவோராக திறம்பட செயல்பட்டு வருகிறார். பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். அக்ஷதாவும் - நாராயண் மூர்த்தியும் பெங்களூரில் உள்ள ஐஸ்கிரீம் கடையில், சாதாரண உடையில் எளிமையாக ஐஸ்கிரீம் வாங்கி சுவைத்து சாப்பிட்ட காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.