M. Karunanidhi | M.K. Stalin (Photo Credit: @arivalayam X)

செப்டம்பர் 17, நந்தனம் (Chennai News): சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ (YMCA Stadium) மைதானத்தில், தந்தை ஈ.வே ராமசாமி பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட 75 ஆண்டுகள் ஆகியதை முன்னிட்டு பவள விழா (DMK 75 Celebration) & முப்பெரும் விழா கூட்டம் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் மறைந்த தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியின் (Kalaignar Karunanidhi) உருவம் மற்றும் குரல் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ (Karunanidhi AI Speech) தொழில்நுட்பம் மூலமாக மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு தொண்டர்கள் மத்தியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனால் பலரும் வியந்து தங்கள் உற்சாகத்தை முழக்கமாக எழுப்பி இருந்தனர்.

அமெரிக்கா பயணத்தை வென்றோம்:

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதல்வர் & திமுக தலைவர் மு.க ஸ்டாலின் (MK Stalin), "உங்களுடைய வேர்வை, இரத்தம், மூச்சுக்காற்று, உழைப்பால் மட்டுமே கழகம் கம்பீரமாக நிற்கிறது. இப்படியான திமுக தொண்டர்களின் உள்ளத்திற்கு அன்பான வணக்கம். நீங்கள் இல்லாமல் கழகமோ நானோ இல்லை. அந்த நன்றி உணர்ச்சியுடன் நான் உங்களின் முன்பு நிற்கிறேன். சைதாப்பேட்டை கலைஞர் கருணாநிதியால் 2 முறை வெல்லப்பட்ட தொகுதி. அமெரிக்கப்பயணத்தை சென்றோம் என்று கூறுவதை விட, வென்றோம் என கூற வேண்டும். பல்லாயிரக்கணக்கான கோடி முதலீடுகள், பல்லாயிரக்கானோருக்கு வேலை போன்றவை கிடைக்கவுள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இந்தியாவின் சமூக வலைத்தளங்களில் நம்மை பெருமைப்படுத்தி பேசுகின்றனர். இதுவே நமது சாதனை. Car Rammed into Man: சாலையோரம் உறங்கியவர் மீது காரை ஏற்றிப்படுகொலை; சென்னையில் பயங்கரம்.. பதைபதைப்பு காட்சிகள்.! 

ஆட்சியும், கட்சியும் இரண்டு கண்கள்:

1966 முதல் இன்று வரை திமுக மக்களுக்காக உழைத்து வருகிறது. கலைஞரின் வழிகாட்டல் மட்டுமே என்னை இதுவரை உயர்த்தியுள்ளது. தமிழக மக்களால் தமிழ்நாடு முதல்வர் என்ற பொறுப்பும், தொண்டர்களாகிய உங்களால் தலைவர் என்ற பொறுப்பையும் இரண்டு கண்களாக பாவித்து நான் செயல்பட்டு வருகின்றனர். இந்த மாநாட்டில் நான் தலைவராக இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் திராவிட மாதமாக கொண்டாடப்படுகிறது. பெரியாருக்கு பெரியார் என்ற பட்டத்தை வாங்கியதே பெண்கள் தான்.

ஜெகத்ரட்சகனுக்கு பாராட்டு:

கலைஞரின் விருதை பெற்றுக்கொண்ட ஜெகத்ரட்சகன், கலைஞரால் ஆழ்வார் என அழைக்கப்படுபவர். இவர் என்னால் திராவிட ஆழ்வார் என அழைக்கப்படுவார். பள்ளிக்காலத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அவர் கலந்துகொண்டார். கல்லூரி காலத்தில் அவர் பெரியாரை சந்தித்ததால் வெளியேற்றப்பட்டனர், இன்று பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். கல்வி நிலையங்கள், இலக்கியப்பணிகள் என எது இருந்தாலும், அரசியலை முழு மூச்சாக கொண்டு அரசியலில் கலைஞரின் பக்தனாக செயல்பட்டவர் அவர். எத்தனையோ நெருக்கடி, மிரட்டல் வந்தது, வந்துகொண்டு இருக்கிறது. ஆனால், அச்சமின்றி கழகமே துணை என செயல்படும் குணம் கொண்டவர் ஜெகத்ரட்சகன்.

பவளவிழா நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, முக ஸ்டாலின் சமூக வலைதளப்பதிவு:

அண்ணன்-தம்பியாக கட்டமைக்கப்பட்ட இயக்கம்:

ஒரு கழகம் 75 ஆண்டுகளாக நிலைத்திருப்பது சாதாரணமானது இல்லை. அதற்கு முழுமூச்சு காரணம் நீங்கள் (தொண்டர்கள்) தான். கடந்த 1967 ம் ஆண்டு கழகம் தோற்றபோது, திமுக கதை முடிந்துவிட்டது என கூறினார்கள், அப்போது, கருணாநிதி வாழ்வே முடிந்தாலும், கழகம் முடியாது என கலைஞர் கூறினார். இலட்சம் கிளைக்கழகங்கள் அடிக்கட்டுமானம் உறுதித்தன்மையுடன் இருக்கிறது. அதற்கு காரணமானவர்கள் அண்ணா, கலைஞர் உட்பட பல தலைவர்கள். எத்தனையோ தலைவர்கள், தளபதிகள், போராளிகளை உருவாக்கி இருக்கிறார்கள். அண்ணன்-தம்பியாக பாச உணர்வுடன் உடன்பிறப்பாக கழகம் கட்டமைக்கப்பட்டது. திமுகவில் தொண்டர்களாக இருப்பதே வாழ்நாள் பெருமை. 75ம் ஆண்டிலும், 50 வயதிலும் கழகம் ஆட்சியில் இருக்கிறது. நூற்றாண்டு விழா கொண்டாடும்போதும் திமுக கட்டாயம் ஆட்சியில் இருக்கும். திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது. கடந்த 75 ஆண்டுகளில் எண்ணற்ற சாதனை செய்துள்ளோம். Nipah Virus: நிபா வைரஸ் மரணம் எதிரொலி; உஷார் நிலையில் தமிழ்நாடு - கேரளா எல்லை.. சோதனைகள் தீவிரம்.! 

மத்திய அரசு மாநிலங்களுக்கு முன்னுரிமை வழங்கவில்லை:

தாயதமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டினோம், தாயமொழிக்கு செம்மொழி தகுதி பெற்றுத்தந்தோம், ஆதி-திராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், புலவர்கள், நெசவாளர்கள் என விளிம்புநிலை மக்களை கல்வி, வேலைவாய்ப்பில் முன்னிலைப்படுத்தினோம், பல கல்வி நிறுவனங்கள், சாலைகள், பாலங்கள், அணைகள், நவீன நகரங்கள் என தன்னிறைவுபெற்ற தமிழ்நாட்டை உருவாக்கி, இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தோம். மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை, உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு ரூ.1000 , காலை உணவுத்திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பயணத்திட்டம் என பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தனை திட்டங்கள் எங்கும் இல்லை என சொல்லும் அளவு திமுக ஆட்சி நடைபெறுகிறது. தொடர்ந்து அது நடைபெறும். மாநில அரசின் கனவுகளை நிறைவேற்றும் அளவு மத்திய அரசு அமையவில்லை. நிதி உட்பட பிற உரிமைகளுக்கு இன்றும் போராடுகிறோம். இவ்வாறான நெருக்கடிகள் இருக்கின்றன. ஆயிலும் தமிழ்நாட்டை முன்னேற்ற திமுக செயல்படுகிறது.

கிரீம் பன் விவகாரம்:

மாநில சுயாட்சி கொள்கை என்பது நமது உயிர்நாடி கொள்கையில் ஒன்று. இன்று கிரீம் பன்னுக்கு (Annapoorna Cream Bun) எவ்வுளவு வரி என்பதை கூட கேட்க இயலாத சூழல் உருவாகியுள்ளது. குறைவான நிதிவளம் கொண்டே இவ்வுளவு நாம் செய்துள்ளோம், நிறைவான நிதி கிடைத்தால் தமிழ்நாட்டை மென்மேலும் உயர்த்த முடியும். மாநில சுயாட்சிக்கு தேவையான மத்திய அரசின் சட்டத்தை திமுக இயற்ற வழிவகை செய்யும். நின்ற தேர்தலில் எல்லாம் வென்றவர் கலைஞர். ஸ்டாலின் என்ற ஒற்றை பெயருக்கும் கோடிக்கணக்கான தொண்டர்களின் உழைப்பு, வெற்றி இருக்கிறது. உங்களின் மீதுள்ள நம்பிக்கையால் கூறுகிறேன், நாம் மட்டுமே அடுத்தடுத்த தேர்தலில் வெற்றி பெறுவோம். அதற்காக மெத்தனமாகவும் இருக்க வேண்டும். எந்த இயக்கமாக இருந்தாலும் கொள்கை, அதனை செயல்படுத்த வீரர்கள், கொள்கையை உருவாக்க தலைவர்கள் வேண்டும். அவை நம்மிடம் உள்ளது" என பேசினார்.

ஏஐ தொழில் நுட்பத்துடன் கலைஞரையே மீட்டுருவாக்கம் செய்த காணொளி: