![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/1720156522Keir%2520Starmer-380x214.jpg)
ஜூலை 05, லண்டன் (World News): ஐரோப்பிய யூனியனில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிய நிலையில், பிரிட்டன் தனது முதல் நாடாளுமன்ற தேர்தலை (UK Election) நேற்று நடத்தியது. பிரிட்டனில் எந்தக் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ, அந்தக் கட்சியின் தலைவர், அமையவிருக்கும் புதிய அரசுக்கு தலைமை தாங்குவார். இந்தியாவைப் போன்றே பிரிட்டனிலும் பிரதமர் தான் அரசாங்கத்தை வழிநடத்துபவர். சில அதிகாரங்கள் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவற்றுக்கு பிரித்து வழங்கப்பட்டிருந்தாலும், அரசு கொள்ளைகளை மற்றும் முடிவுகளுக்கு பிரிட்டன் பிரதமரே இறுதியாக பொறுப்பாவார்.
பிரிட்டன் பொதுத் தோ்தல்: பிரிட்டன் நாட்டில் வாக்குச் சீட்டு முறையிலே தேர்தல் நடைபெறும். யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள். அங்குள்ள 650 தொகுதிகளிலும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் களமிறங்கினார்கள். சுமார் 4 கோடியே 65 லட்சம் பிரிட்டன் மக்கள் வாக்களிக்கும் இந்த பொதுத் தேர்தலில், இந்த முறை கன்சர்வேடிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. Kuala Lumpur Gas Leak: கோலாலம்பூர் விமான நிலையத்தில் திடீர் ரசாயன கசிவு; 39 பேர் உடல்நலக்குறைவால் பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி.!
தோ்தல் முடிவுகள்: தேர்தல் முடிவுகள் (Result Updates) வந்து கொண்டிருக்கின்றன. தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 இடங்களில் 330-க்கும் அதிகமான இடங்களை வென்றுவிட்டது. கன்சர்வேடிவ் கட்சி இதுவரை 72 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. மேலும் 160-க்கும் அதிகமான இடங்களுக்கான முடிவுகள் வரவேண்டியுள்ளன. இதன்மூலம் ஆளுங்கட்சி படுதோல்வி அடையும் எனத் தெரிகிறது. பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து தொழிலாளர் கட்சியின் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க போகிறது தொழிலாளர் கட்சி.