Instagram Nudity Protection Update: இன்ஸ்டாகிராம் சாட்டில் இனி ஆபாச பட மெசேஜ் வாராது; அதிரடி காட்டிய மெட்டா.. அசத்தல் அப்டேட் இதோ.!
சர்வதேச அளவில் மக்களின் வரவேற்பை பெற்ற இன்ஸ்டாகிராம் செயலி, தொடர்ந்து பயனர்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.
ஏப்ரல் 12, புதுடெல்லி (New Delhi): கடந்த 2010ம் ஆண்டு பொழுதுபோக்கு பயன்பாட்டு செயலியாக உலகளவில் அறிமுகம் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் (Instagram), இன்று தவிர்க்க முடியாத சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இருக்கிறது. பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம், திரெட்ஸ் ஆகியவை மெட்டா இயங்குதள (Meta Platforms) நிறுவனத்தின் அங்கமாக இருக்கிறது. தற்போதைய நிலையில் இன்ஸ்டாகிராம் செயலியை மாதத்திற்கு 1.21 பில்லியன் பயனர்கள் பயன்படுத்துகின்றனர்.
பயனர்களின் பாதுகாப்பு விஷயத்தில் முனைப்புடன் செயல்படும் (Instagram Privacy & Security) இன்ஸ்டாகிராம்: சமூக வலைத்தளங்களை பொறுத்தமட்டில் அளப்பரிய தகவல் மற்றும் காணொளிகளை கொண்டுள்ளதை போல, விஷமிகளின் செயல்படும் அதிகம். இதனால் தனிநபரின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு அனுப்பப்படும் உள்ளடக்கத்தின் நிலை போன்றவை கேள்விக்குறியாகிறது. தவறான மற்றும் ஆபாசமான உள்ளடக்கத்தை பயனர்களுக்கு தேவையின்றி அனுப்புவதை தடுக்க சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
கைகொடுக்கும் ஏஐ தொழில்நுட்பம்: இளம் வயதினரின் நலன் கருதி, அவர்களுக்கு ஆபாசமான உள்ளடக்கத்தை மர்ம நபர்கள் தங்களின் தனிப்பட்ட குறுஞ்செய்தி (Insta Direct Message DM) அமைப்பு வாயிலாக அனுப்பி வைக்கும் சூழலை கட்டுப்படுத்த, தற்போது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆபாசமான உள்ளடக்கத்தை கண்டறிந்து மறைத்து (Blur Visual) அனுப்பும் திறன் சோதனைக்கட்டத்தில் இருக்கிறது. IIT Student Suicide: ஐஐடி விடுதியில் தூக்கில் தொங்கிய மாணவர்; மன அழுத்தத்தால் 20 வயதில் நடந்த சோகம்.!
ப்ளர் செய்து அனுப்பப்படும் படங்கள் ஆபாசமானது: இந்த சோதனை வெற்றியடையும் பட்சத்தில், ஏஐ அமைப்பு குறுஞ்செய்தி பக்கத்தில் தனிநபர் ஆபாசமான புகைப்படத்தை அனுப்பினால், அது பயனருக்கு சென்றடையும்போது ப்ளர் செய்யப்பட்டவாறு அனுப்பி வைக்கப்படும். இதன் வாயிலாக பயனர் தனக்கு அனுப்பப்பட்டுள்ள உள்ளடக்கம் ஆபாசமானது என்பதை உறுதி செய்து, பின் செய்தி அனுப்பியவர் குறித்து புகார் அளிக்கலாம் அல்லது பிளாக் செய்ய்யலாம்.
ஆபாச உள்ளடக்கத்தை தடுக்க ஏற்பாடுகள்: இதன் பேரில் பெறப்படும் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இன்ஸ்டாகிராம் தெளிவுபடுத்தியுள்ளது. விரைவில் நிர்வாண அமைப்பு பாதுகாப்பு (Nudity Protection) திறன் வாயிலாக, 18 வயதுக்கு கீழ் உள்ள இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களுக்கு அனுப்பப்படும் செய்திகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும், அவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்கில் பாதுகாப்பு அமைப்பை செயல்படுத்தினால் அதுசார்ந்த ஆபாச உள்ளடக்கங்கள் வராமலும் தடுக்க வழிவகை செய்யப்படும்.