PSLV C58 XPoSat Mission: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நடுவே, கம்பீரமாக சாதனை படைத்த இஸ்ரோ; விண்ணில் ஏவப்பட்டது எக்ஸ்போ சாட் செயற்கைக்கோள்..!

அந்த வகையில், விண்வெளி மூலப்பொருட்கள் எக்ஸ்ரே ஆராய்ச்சிக்கு செயற்கைகோள் அனுப்பப்பட்டுள்ளது.

PSLV-C58/XPoSat Mission (Photo Credit: @ANI X)

ஜனவரி 01, ஸ்ரீஹரிகோட்டா (Sriharikotta): இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இன்று தனது பிஎஸ்எல்வி-சி58 எஸ்கேபோ சாட் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. எக்ஸ்-ரே போலார்மீட்டர் செயற்கைகோள், இஸ்ரோவின் முதல் விண்வெளி தலத்தில் இருந்து இன்று ஏவப்பட்டது.

நேற்று தொடங்கிய கவுண்டவுன்: விண்வெளியில் உள்ள துருவ பகுதிகளை கண்டறியும் நோக்கில் விண்ணில் ஏவப்பட்ட எஸ்கேபோ செயற்கைகோளுக்கான கவுண்டவுன் நேற்று தொடங்கிய நிலையில், இன்று காலை 09:10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போதைய நிலைமையில் பூமியில் இருந்து 650 கி.மீ தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. Mumbai Shocker: குடிபோதைக்கு அடிமையான கணவனை கல்லால் அடித்துக்கொன்ற மனைவி; மதுவுக்கு பணம் கேட்டு தாக்கியதால் பயங்கரம்.! 

எக்ஸ்போ ஸாட் இஸ்ரோவின் முதல் செயற்கைகோள்: வான்வெளியில் உள்ள பொருட்களில், எக்ஸ்ரே வழியே விண்வெளி அடிப்படையிலான துருவ முனைகளை அளவிடும் ஆராய்ச்சிக்காக, இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ள முதல் செயற்கைகோள் இது ஆகும். தொடர்ந்து தனது செயல்பாடுகளை திறம்பட செயற்கைகோள் செய்து வருவதாகவும், நமது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

விண்ணில் செலுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட காணொளி:

இஸ்ரோ அறிவிப்பு: