Galaxy 6 Smartwatch: பிபி, ஈசிஜியை கண்காணிக்கும் வசதியுடன் களமிறங்கிய சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி 6 ஸ்மார்ட்வாட்ச்.. விபரம் இதோ.!

கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Samsung Galaxy 6 Smartwatch (Photo Credit: Samsung.com)

ஜனவரி 13, புதுடெல்லி (Technology News): தொழில்நுட்ப உலகில் நமது உடல் செயல்பாடுகளை நுணுக்கமான கண்டறிந்து உயிர்களை பாதுகாக்கும் பல்வேறு தொழில்நுட்பங்கள் அறிமுகமாகிவிட்டன. இதனால் அவசர காலங்களில் மக்களின் உயிர் விரைந்து காப்பாற்றப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கைக்கடிகாரத்தில் தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டு, மனித உடல் செயல்பாடுகளை கண்காணிக்கும் அம்சங்கள் வழங்கப்பட்டன.

இதய செயல்பாடுளை கண்காணிக்கும்: அந்த வகையில், சாம்சங் நிறுவனம் நேற்று தனது புதிய அம்சங்களை கொண்ட கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் 6வது கைக்கடிகார தொடர் தயாரிப்பாக, (Galaxy Watch 6) தொழில்நுட்ப அம்சம் கொண்ட கைக்கடிகாரம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த கைக்கடிகாரம் மனிதர்களின் உயர் இரத்த அழுத்தம் (Blood Pressure BP), இதயத்தின் செயல்பாடுகள் (Electrocardiogram ECG) ஆகியவற்றை கண்காணிக்கும்.

கூடுதல் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன: சாம்சங் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் செயலியின் (Samsung Health Monitor App) வாயிலாக கைக்கடிகாரத்தை இணைத்து பயனர்கள் தங்களின் உடல்நலனை கண்காணித்துக்கொள்ளலாம். இதற்கு முன்னதாக சாம்சங் நிறுவனம் வெளியிட்ட கேலக்சி 4 மற்றும் 5 கைக்கடிகாரத்தை விடவும் கூடுதல் அம்சங்கள் இதில் இணைக்கப்பட்டு இருக்கின்றன. Nepal Buddha Boy Arrested: சாமியாராக மக்களை நம்பவைத்து சிறுமியிடம் அத்துமீறல்: 4 பேர் மாயம்.. நேபாளத்தின் புத்த பையன் அதிரடி கைது.. யார் இவர்?..! 

இரவு - பகலாக கண்காணிக்கும்: இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கைக்கடிகாரம், இந்திய மருந்து தரக்கட்டுப்பாடு (Central Drugs Standard Control Organisation) நிறுவனத்தின் அறிவுரைப்படி தனது கைக்கடிகாரத்தில் அம்சங்களின் தரவுகளை இணைத்து உரிய அனுமதியையும் பெற்றுள்ளது. பயனர்களின் உடல்நலனை இரவு-பகலில் தொடர்ந்து கண்காணிக்கும் திறன் கொண்ட கைக்கடிகாரமாக சாம்சங் கேலக்சி 6 அமைந்துள்ளது.

ரூ.30 ஆயிரம் தொடக்க விலை: கேலக்சி 6 ரகத்தில் கேலக்சி 6 கிளாசிக் என்ற மற்றொரு வகையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் சிறப்பம்சமாக பயனர்கள் Tap & Pay அமைப்பு மூலமாக பணபரிமாற்றமும் செய்துகொள்ளலாம். அதற்கான வசதிகளை செயலியில் முன்னதாகவே பதிவு செய்தும் வைத்துக்கொள்ளலாம். இந்திய மதிப்பில் சாம்சங் கேலக்சி 6 நவீன தொழில்நுட்ப கைக்கடிகாரம் ரூ.29,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாத சந்தா செலுத்தி வாங்கிக்கொள்ளவும் இயலும். அமேசான், பிளிப்கார்ட், சாம்சங்கின் அதிகாரபூர்வ இணையதளத்திலும் முன்பதிவு செய்து கைக்கடிகாரத்தை பெற்றுக்கொள்ளலாம்.

முன்பதிவு செய்ய: Galaxy 6 Smartwatch