Best Budget Smartphones Under Rs.20,000: பட்ஜெட் தொகையில் ரூ.20,000/- க்கும் கீழ் சிறந்த ஸ்மார்ட்போன்கள்; அசத்தல் லிஸ்ட் இதோ.!

நீங்கள் எதிர்பார்க்கும் அட்டகாசமான திறனில், உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப விற்பனை செய்யப்படும் ரியல்மி, மோட்டோ, ரெட்மி, லாவா ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களின் விபரம் இத்துடன் இணைக்கப்ட்டுள்ளது.

Smartphones Use (Photo Credit: Pixabay)

மார்ச் 29, சென்னை (Technology News): தினமும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆயிரக்கணக்கில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களின் புதுப்புது கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை உட்புகுத்தி வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதனால் இந்திய ஸ்மார்ட்போன் விற்பனை சந்தை என்பது எப்போதும் புதிய பொருட்களை அதிகம் வாங்கும் இடமாக இருந்து வருகிறது. அதேவேளையில், மக்கள் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை எதிர்பார்ப்பதும் உண்டு. இன்று (Budget Smartphones) பட்ஜெட்டில் ரூ.20,000 க்கு கீழ் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து காணலாம்.

 ரியல்மி 12 ப்ளஸ் (Realme 12 Plus): 5000 mAh பேட்டரி, சூப்பர்வோக் பேட்டரி திறன், 8 GB ரேம் 128 GB ரோம், மீடியாடெக் டிமென்சிட்டி 7050, 6.67 இன்ச் டிஸ்பிளே, 120 Hz புதுப்பிப்பு திறன், 50 MP + 8 MP + 2 MP பிரைமரி கேமிரா, 16 MP செல்பி கேமிரா, 5G நெட்ஒர்க் அமைப்புடன் விற்பனை செய்யப்படும் ரியல்மி 12 ப்ளஸ் ஸ்மார்ட்போன் ரூ.19,599 க்கு விற்பனை செய்யப்படுகிறது. Surya 44 Update: நடிகர் சூர்யாவுடன் கைகோர்த்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்; சூர்யாவின் 44வது படத்தின் அசத்தல் அப்டேட் இதோ.! 

 மோட்டோ ஜி54 (Moto G54): 6000 mAh பேட்டரி, 8 GB ரேம் 128 GB ரோம், மீடியாடெக் டிமென்சிட்டி 7020, 6.5 இன்ச் டிஸ்பிளே, 120 Hz புதுப்பிப்பு திறன், 50 MP + 8 MP பிரைமரி கேமிரா, 16 MP செல்பி கேமிரா, 5G நெட்ஒர்க் அமைப்புடன் விற்பனை செய்யப்படும் மோட்டோ ஜி54 ஸ்மார்ட்போன் ரூ.15,790 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 சியோமி ரெட்மி நோட் 13 (Xiaomi Redmi Note 13): 5000 mAh பேட்டரி திறன், பாஸ்ட் சார்ஜரிங் அமைப்பு, 6 GB ரேம், 128 GB ரோம், 6.67 இன்ச் டிஸ்பிளே, 120 Hz புதுப்பிப்பு திறன், 108 MP + 8 MP + 2 MP பிரைமரி கேமிரா, 16 MP செல்பி கேமிரா, 5G நெட்ஒர்க் அமைப்புடன் விற்கப்படும் சியோமி ரெட்மி நோட் 13 ஸ்மார்ட்போன் ரூ.16,785 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 ஒன்ப்ளஸ் நோர்டு சிஇ 3 லைட் 5 ஜி (OnePlus Nord CE 3 Lite 5G): 5000 mAh பேட்டரி, சூப்பர்வோக் சார்ஜர், 8GB ரேம், 128 GB ரோம், 6.72 இன்ச் டிஸ்பிளே, 120 Hz புதுப்பிப்பு திறன், 108 MP + 2 MP + 2 MP பிரைமரி கேமிரா, 16 MP செல்பி கேமிரா, 5G நெட்ஒர்க் அமைப்புடன் விற்பனை செய்யப்படும் ஒன்பிளஸ் நோர்டு சிஇ 3 லைட் ஸ்மார்ட்போன் ரூ.17,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. PM Modi's Unique Jacket: பிரதமர் மோடி அணியும் மேல் ஜாக்கெட்-க்கு இப்படி ஒரு தனித்துவமா?.. அவரே தெரிவித்த ஆச்சரிய தகவல்.! 

 லாவா பிளேஸ் கர்வ் 5ஜி (Lava Blaze Curve 5G): 8 GB ரேம், 128 GB ரோம், 2.6 GHz Octa Core, 6.67 இன்ச் டிஸ்பிளே, 120 Hz புதுப்பிப்பு திறன், 64 MP + 8 MP + 2 MP பிரைமரி கேமிரா, 32 MP செல்பி கேமிரா, 5000 mAh பேட்டரி திறன், 5G நெட்ஒர்க் அமைப்புடன் லாவா பிளேஸ் கர்வ் 5G ஸ்மார்ட்போன் ரூ.17,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இவை தவிர்த்து ரியல்மி 11 (ரூ.16,448), சாம்சங் கேலக்சி எம்34 (ரூ.15,999), ஒப்போ ஏ79 5ஜி (ரூ.15,700), டெக்னோ கேம்நான் 20 Pro (ரூ.17,999), விவோ டி2 5ஜி (ரூ.15,999) ஆகியவையும் பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்ற, ரூ.20 ஆயிரத்திற்கும் கீழ் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் ஆகும்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement