Astor Blackstorm Edition: எம்ஜி மோட்டார்ஸ் எஸ்யூவி ஆஸ்டரின் பிளாக்ஸ்டார்ம் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்: ஸ்டைலிஷான பிளாக் தீமில்.!

சர்வதேச சந்தையில் கிட்டத்தட்ட 100ஆண்டுகளாக தனக்கென பிரத்யேகமான இடத்தை பிடித்துள்ள எம் ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய பிளாக்ஸ்டார்ம் எஸ்யூவி காரை அறிமுகம் செய்திருக்கிறது.

MG Motors SUV Astor Blackstorm Edition

செப்டம்பர் 7, புது டெல்லி (Technology News): இந்தியாவில் கார் விற்பனை மேற்கொள்ளும் எம்ஜி மோட்டார்ஸ் (MG Motors) நிறுவனம் எஸ்யூவி (SUV) வகைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆஸ்டர் (Astor) காரில் ஒரு புதிய எடிஷனை அறிமுகம் செய்திருக்கிறது. பிளாக்ஸ்டார்ம் என்ற பெயரில் இந்த கார் விற்பனைக்கு வந்திருக்கிறது.

பிளாக் பினிஷிங் கொண்ட ரூப் கிரில், கிளாசி பிளாக் கதவுகள், பிளாக்  ஃபினிஷ் செய்த ஹெட்லேம்ப், கருப்பு அலாய் சக்கரங்கள் என அட்டகாசமான தோற்றத்துடன் இந்த கார் விற்பனைக்கு வந்திருக்கிறது. காரின் என்ஜின் எவ்வித மாற்றமும் இன்றி முன்பு இருந்தது போலவே 1.5 லிட்டர் கொள்ளளவுடன் அமைந்திருக்கிறது.

ஏடிஏஎஸ் (ADAS) உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் வாடிக்கையாளர்களின் தேவையாகிவிட்டதால் எம் ஜி மோட்டார் நிறுவனம்  சில வருடங்களுக்கு முன்பு எஸ்யூவி ஆஸ்டர் காரை அறிமுகப்படுத்தியது.இந்த பிளாக்ஸ்டார்ம் கார் இரண்டாம் கட்ட ஏடிஏஎஸ் பாதுகாப்பு அம்சத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. Atlee Watches FDFS in Chennai: ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க வந்திருந்த இயக்குனர் அட்லீ: ஜவான் டீ சர்ட் அணிந்து மாஸ் என்ட்ரி.!

ஸ்டேரிங் மவுண்ட் ஆடியோ, எச்டி டச் ஸ்கிரீன்  இன்போடைன்மென்ட் (HD Screen Infotainment) (10.1 inch), ஐ ஸ்மார்ட் கனெக்டர் (ismart Connector) வசதிகள், ப்ளூடூத்  இணைப்பு போன்ற வசதிகள் இடம்பெற்று இருக்கின்றன. இந்த சிறப்பு எடிஷன்  காரின் ஆரம்ப விலை ரூ.14,47,800 ஆக  நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும்  இது ஒரு  லிமிடெட் எடிஷன் என்பதால் குறுகிய காலத்திற்கு மட்டுமே இந்த கார் விற்பனை செய்யப்படும்.