Microsoft Updates: கணினி அறிமுகமான காலத்தில் இருந்து பயன்பாட்டில் இருந்த வேர்ட்பேட் நீக்கப்பட போகிறது: மைக்ரோசாப்ட்-இன் எதிர்பாராத அறிவிப்பு.!
அனைவருக்கும் பரிச்சயமான மைக்ரோசாப்ட் வேர்ட்பேட் பெரிதும் பயன்படுத்தப்படாததால் மைக்ரோசாப்ட் நிறுவனம் இனி வரும் காலங்களில் வேர்ட்பேட்-ஐ முற்றிலுமாக நீக்க போவதாக தெரிவித்திருக்கிறது.
செப்டம்பர் 12, வாஷிங்டன் (Technology News): ஆங்கிலத்தில் டைப்பிங் கற்பது தொடங்கி, அலுவலக பணிகள் வரை எல்லாவற்றிற்கும் வேர்ட்பேட் (Wordpad) இன்றியமையாத பங்களித்திருக்கிறது. வேர்ட்பேட்- ஐ விட ஆற்றல் மிகுந்த பல கருவிகள் வந்திருந்தாலும் அதுதான் மைக்ரோசாப்ட் ஆபீஸின் மற்ற ப்ரோகிராம்களுக்கு அடித்தளமாக இருந்தது.
30 ஆண்டுகளுக்கும் மேல் உபயோகத்தில் இருந்த செயலி, சமீப காலமாக மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படுவதில்லை என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறுகிறது. அதனால் வேர்ட்பேட்- ஐ (Microsoft Wordpad) நிறுத்தப் போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
வின்டோஸ் 95- இல் தொடங்கி எல்லா கணினிகளிலும் வேர்ட்பேட் ஒரு அங்கமாக இருக்கிறது. Actress Gautami’s Land taken over: நில அபகரிப்பு புகார் கொடுத்திருக்கிறார் நடிகை கௌதமி: ரூ.25 கோடி நிலத்தை மோசடி செய்து கைப்பற்றிய கட்டுமான அதிபர்.!
வின்டொஸ் 7 (Windows 7) அறிமுகமான போது அதில் இருந்த வேர்ட் ப்ராசசரில் (Word Processor) பல நவீன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்தது. வின்டொஸ் 8- ல் (Windows 8) கவனிக்கும்படியான அப்டேட் ஒன்றும் இல்லை. வேர்ட்பேட் எப்போது நீக்கப்படும் என்பதைப் பற்றி மைக்ரோசாப்ட் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை .
மைக்ரோசாப்ட் கோபைலட் (Microsoft Copilot) என்ற பெயரில் செயற்கை தொழில்நுட்பத்துடன் கூடிய இணைப்பு (AI Supporter) மைக்ரோசாப்டின் வின்டொஸ் 11- இல் (Windows 11) அறிமுகமாக இருக்கிறது. இனி வரவிருக்கும் அடுத்தடுத்த அப்டேடட் வர்ஷன்களில் பிங் ஏஐ (Bing AI) போன்ற புதிய செயற்கை தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் இடம்பெறும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)