Actress Gautami’s Land taken over: நில அபகரிப்பு புகார் கொடுத்திருக்கிறார் நடிகை கௌதமி: ரூ.25 கோடி நிலத்தை மோசடி செய்து கைப்பற்றிய கட்டுமான அதிபர்.!
ஸ்ரீபெரும்புதூரில் நடிகை கௌதமிக்கு சொந்தமான 25 கோடி மதிப்பிலான நிலத்தை, ஏஜென்ட் அழகப்பன் அபகரித்ததாக அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். நிலத்தை விற்று தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார்.
செப்டம்பர் 12, சென்னை (TamilNadu News): தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் நடிகை கௌதமி. தனது 17-வது வயதிலிருந்து சினிமாவில் நடித்து சம்பாதித்த மொத்த பணத்தையும் சேர்த்து, ஸ்ரீபெரும்புதூரில் 46 ஏக்கர் நிலம் வாங்கி இருக்கிறார். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.25 கோடி ஆகும்.
கடந்த 2004-ஆம் ஆண்டு கௌதமியின் மகளுக்கு நாலு வயதாக இருந்தபோது அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். தனது மருத்துவ சிகிச்சைக்காகவும் மகளின் பராமரிப்புக்காகவும் பணம் தேவைப்பட்டதால் அந்த நிலத்தை விற்க முடிவு செய்தார். ICC Cricket World Cup 2023: உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எத்தனை ஆட்டங்கள்?.. சென்னையில் எந்தெந்த ஆட்டம்?.. முழு விபரம் இதோ.!
அந்த சமயத்தில் கட்டுமான நிறுவனத்தின் அதிபர் அழகப்பன் கௌதமியை தொடர்பு கொண்டு உள்ளார். அவர் கௌதமிக்கு சொந்தமான நிலத்தை விற்றுத்தர உதவி செய்வதாக கூறியிருக்கிறார்.
அதனால் கௌதமி தனது நிலத்தை விற்பனை செய்யும் அதிகாரத்தை அழகப்பனுக்கு வழங்கியிருக்கிறார். அப்போது அவர் கௌதமியிடம் பல்வேறு பத்திரங்களில் கையெழுத்து வாங்கியிருக்கிறார். அழகப்பன் கௌதமியின் கையெழுத்தை பயன்படுத்தி போலி ஆவணங்கள் தயாரித்து, தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து கௌதமியின் நிலத்தை மோசடி செய்து அபகரித்துள்ளார்.
இது பற்றி நடிகை கௌதமி கேட்டபோது, அழகப்பன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனால் கௌதமி தனது நிலத்தை மீட்டுத் தர வேண்டியும், அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
(The above story first appeared on LatestLY on Sep 12, 2023 01:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

