Air Pollution India: வடஇந்தியாவை மேகம்போல சுற்றிவளைத்த காற்றுமாசு; நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்.!
குருகிராமில் 370 AQI புள்ளிகளும், காசியாபாத்தில் 382 AQI புள்ளிகளும், நொய்டாவில் 348 புள்ளிகளும், கிரேட்டர் நொய்டாவில் 474 புள்ளிகளும், பரிதாபத்தில் 396 புள்ளிகளும் பதிவாகி காற்று மாசு உச்சக்கட்டத்தில் இருக்கிறது.
நவம்பர் 08, புதுடெல்லி (Technology News): இந்தியாவின் தலைநகரான டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள ஹரியானா, உத்தரகாண்ட், உத்திரபிரதேசம் மாநிலங்களில் உள்ள விவசாய நிலங்களில், விளைபயிர் அறுவடை முடிந்ததும், விவசாய கழிவுகளை தீயிட்டு கொளுத்துவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.
இதனால் விவசாய நிலங்களில் உண்டாகும் புகை, இந்தியாவின் தலைநகர் டெல்லியை சூழ்ந்து, அங்குள்ள மக்களை கடுமையாக பாதிக்கிறது. இது தலைநகரில் காற்றுமாசு பிரச்சனையை தலையாய தீராத தலைவலியாக இருப்பதால், மாநில அரசும்-மக்களும் திணறி வருகின்றனர்.
காற்று மாசுவை கட்டுப்படுத்த டீசல், பெட்ரோல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு, கட்டுமான பணிகளுக்கு தடை என மாநில அரசு பல்வேறு விதிமுறைகளை விதிக்கிறது. விழாக்களில் பட்டாசுகள் வெடிக்கவும் அங்கு முழு அளவிலான தடை இருக்கிறது. No.1 ODI Batter:பாபரின் சாதனையை பின்னுக்குத்தள்ளி, முதலிடத்திற்கு முன்னேறிய ஷுப்னம் ஹில்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
'
காற்றுமாசு தரக்கட்டுப்பாடு அளவீடுகள்படி, குருகிராமில் 370 AQI புள்ளிகளும், காசியாபாத்தில் 382 AQI புள்ளிகளும், நொய்டாவில் 348 புள்ளிகளும், கிரேட்டர் நொய்டாவில் 474 புள்ளிகளும், பரிதாபத்தில் 396 புள்ளிகளும் பதிவாகி காற்று மாசு உச்சக்கட்டத்தில் இருக்கிறது.
இந்நிலையில், வடஇந்திய மாநிலங்களை சூழ்ந்துள்ள காற்று மாசு தொடர்பான புகைப்படத்தை நாசா வெளியிட்டு இருக்கிறது. காற்றில் கார்பன் மோனாக்ஸைடின் அளவும் அதிகரித்து வருகிறது.
AQI எனப்படும் Air Quality Index-ன் படி 0 - 50 புள்ளிகள் நல்ல காற்றாகவும், 51 - 100 புள்ளிகள் லேசான மாசடைந்த காற்றாகவும், 101 - 200 புள்ளிகள் நடுத்தர மாசுபாடு கொண்ட காற்றாகவும், 201 - 300 மோசம், 301 - 400 மிகவும் மோசம், 500 க்கு மேல் சுவாசிக்க இயலாத காற்று எனவும் தரம் பிரிக்கப்பட்டுள்ளது.