ICC CWC 2023 | Team India (Photo Credit: X)

நவம்பர் 08, புதுடெல்லி (Sports News): 13-வது ஐசிசி ஆடவர் உலகக்கோப்பை கிரிகெட்தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 10 நாடுகளை சேர்ந்த அணிகள் மோதிக்கொள்ளும் போட்டியில், இந்தியா தற்போது வரை புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

வரும் நவம்பர் 19ம் தேதி உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெறவிருப்பதால், பல அணிகளும் தங்களின் வெற்றிக்காக தொடர்ந்து போராடி வருகிறது. தற்போது நிலவரப்படி முதல் நான்கு இடத்தில் இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் இருக்கின்றன.

ஐசிசி ஆடவர் உலகக்கோப்பை தரவரிசை பட்டியலில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் சாதனையை பின்னுக்கு தள்ளியுள்ள இந்திய கிரிக்கெட்டர் ஷுப்னம் ஹில், உலகளவில் ஒருநாள் போட்டியில் தலைசிறந்த முதல் போட்டியாளராக இடம்பெற்றுள்ளார். Tamil Deepawali 2023: தீபாவளி நன்னாளில் பிரம்மமுகூர்த்ததை தவறவிடாதீர்கள்; நேரம் இதோ.. தெரிஞ்சிக்கோங்க.! 

உலகக்கோப்பை ஆடவர் போட்டிகளில் சச்சின் தெண்டுல்கர், எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகியோரின் வரிசையில், நான்காவது வீரராக ஹில் இடம்பெற்றுள்ளார். வலதுகை பேட்டிங்கில் வெளுத்து வாங்கும் ஹில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 92 ரன்கள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 23 ரன்கள் என மொத்தமாக 6 இன்னிங்சில் 219 ரன்கள் எடுத்திருந்தனர்.

முன்னதாக பாபர் கடந்த 2 ஆண்டுகளாக தக்க வைத்திருந்த சாதனையை இழந்து, தற்போது ஆறாவது இடத்திற்கு சென்றுள்ளார். அதேபோல, சிராஜ் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார்.