Nokia Restructure in India: புதிய உத்வேகத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்திய நோக்கியா; இனி எல்லாம் அதிரடி தான்.!

தருண் சோப்ரா நோக்கியா நிறுவனத்தின் இந்திய தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பதால், எதிர்வரும் நிதியாண்டில் திறம்பட செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nokia Logo (Photo Credit: Nokia.com)

பிப்ரவரி 06, புதுடெல்லி (New Delhi): செல்போன் நெட்ஒர்க் நிர்வாக அமைப்பின் தலைவர், நோக்கியா நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் தருண் சோப்ரா. இவர் தற்போது நோக்கியா நிறுவனத்தின் புதிய இந்திய தலைவராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். நோக்கியாவின் மறுசீரமைப்பு விவகாரத்தில் தருண் முக்கிய பங்காற்றுவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மார்ச் மாதம் 31, 2024 முதல் நோக்கியா நிறுவனத்தில் இருந்து மாலிக் பெறவுள்ள நிலையில், அதற்கடுத்தபடியான நிர்வாக பொறுப்பு தருணுக்கு வழங்கப்பட்டுள்ளது. நோக்கியா நிறுவனத்தின் இந்திய தலைவராக இருந்த சஞ்சய் மாலிக்கின் பதவி ஓய்வுக்கு பின்னர், தருண் அப்பணிக்கு வருகிறார். Chile Forest Fire: கட்டுக்கடங்காமல் பரவும் சிலி காட்டுத்தீ; 112 பேர் பரிதாப பலி., திணறும் அதிகாரிகள்.! 

தற்போது சஞ்சய் மாலிக் மார்ச் வரையில் தனது பணியை தொடருவார் எனினும், தருணுக்கு அதிகாரிகள் வழங்கப்பட்டுவிட்டன. கடத்த 8 ஆண்டுகளாக நோக்கியா நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்த மாலிக், இந்திய சந்தையில் தனது திறம்பட செயல்பாடுகளை வெளிக்கொணர்ந்து இருந்தார். கடந்த அக். மாதம் முதலாகவே நோக்கியா நிறுவனம் சர்வதேச அளவில் தனது பணியாளர்களை வைத்து எதிர்கால திட்டத்துடன் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif