Chile Forest Fire (Photo Credit: @BNONews X)

பிப்ரவரி 06, ஒசோர்னோ (World News): அமெரிக்காவில் உள்ள ஓஸோர்னோ மாகாணம், சிலியில் கடந்த சில நாட்களாகவே காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் அங்குள்ள இலட்சக்கணக்கான மக்கள் அவசர கதியில் பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்து வ்வாறுகின்றனர். தற்போதைய நிலவரப்படி காட்டுத்தீயில் சிக்கி 112 பேர் பரிதாபமாக உயிரிழந்து இருக்கின்றனர். Sendurai Accident: கார் மோதி சாலையோரம் சென்ற பள்ளி மாணவர் பரிதாப பலி; ஆவேசத்தில் காரை சேதப்படுத்திய பொதுமக்கள்.! 

112 பேரின் உயிரை பழிவாங்கிய காட்டுத்தீ: தென்னமெரிக்க வரலாற்றில் சிலி காட்டுத்தீ வரலாற்று தடத்தை பதிவு செய்யும் வகையில் 112 பேரின் உயிரை பறித்துள்ளதாக உள்ளூர் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அங்குள்ள சான் பாபிலோ நகரில் கட்டுக்கடங்காது பரவி வரும் தீயினை கட்டுப்படுத்த இயலாமல் மீட்பு படையினர் திணறி வருகின்றனர். தீ தொடர்ந்து பரவி வருவதால், அதிகாரிகள் தங்களின் மீட்பு பணிகளில் இருந்து பின்வாங்கியும் வருகின்றனர்.

புவிவெப்பமயமாதல்: மாறிவரும் சர்வதேச அளவிலான காலநிலை காரணமாக உலகநாடுகள் அதுசார்ந்த பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றன. ஒருபக்கம் காட்டுத்தீ, கடும் வறட்சி, மறுபக்கம் பேய்மழை, பெருவெள்ளம் என பல நாடுகள் திணறி வருகின்றன.