POCO M6 Pro 5G Launched in India: பட்ஜெட்டில் 5G ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தவர்களுக்கு உற்சாக செய்தி: விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது POCO M6 Pro 5G..!
மிகக்குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் போகோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
நவம்பர் 29, சென்னை (Technology News): இந்தியாவில் பெருவாரியான வரவேற்பை பெற்றுள்ள போகோ நிறுவனம், தனது Poco M6 Pro 5G ஸ்மார்ட்போனை இன்று இந்திய சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. போகோவின் M சீரிஸ் மாடல்களுக்கு கிடைத்த வரவேற்பைதொடர்ந்து, தற்போது Poco M6 Pro 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பல புதிய தொழில்நுட்பங்களையும் கொண்டுள்ளது.
பட்ஜெட் விலைகளுக்கு ஏற்ப 8GB RAM, 256GB Internal Storage உட்பட பல அம்சத்துடன் குறிந்தபட்சமாக ரூ.9,999 முதல் அதிகபட்சமாக ரூ.14,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, 4 GB RAM மற்றும் 64GB Internal Storage திறன் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 9,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. KE Gnagnavel Raja add Full Stop to Controversy: பருத்திவீரன் திரைப்பட விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கே.இ ஞானவேல் ராஜா: பகிரங்க மன்னிப்பு கேட்டார்..!
அதேபோல, 6GB RAM & 128GB Internal Storage திறன் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.11,999 க்கும், 8GB RAM & 256GB Internal Storage திறன் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.14,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மடலில் 1 TB வரை Storage-ஐ அதிகரிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் Flipkart இணையப்பக்கத்தில் மட்டுமே விற்பனைக்கு Poco India நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. Poco M6 Pro 5G ஸ்மார்ட்போனில் 17.25 செ.மீ (6.79 இன்ச்) எச்.டி டிஸ்பிளே, 50MP + 2MP | 8MP Front Camera, 5000 mAh பேட்டரி, Snapdragon 4 Gen 2 Processor உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கின்றன. ஸ்மார்போனுடன் 22.5 W சார்ஜர், Type C Data Cable வழங்கப்படுகிறது.
பட்ஜெட் விலையில் 5G ஸ்மார்ட்போன் வாங்க நினைப்போருக்கு Poco அதிரடியாக தனது ஸ்மார்ட்போனை களமிறக்கி இருக்கிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)