Ameer Sultan | Studio Green Statement | K.E Gnanavel Raja (Photo Credit: Wikipedia / @StudionGreen X)

நவம்பர் 29, சென்னை (Cinema News): கடந்த 2007 ஆம் ஆண்டு அமீர் சுல்தான் தயாரிப்பு & இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், நடிகர்கள் கார்த்திக், பிரியாமணி, பொன்வண்ணன், சரவணன், கஞ்சா கருப்பு, சம்பத்ராஜ், சுஜிதா சிவகுமார் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் பருத்திவீரன் (Paruthiveeran).

இப்படத்தின் தயாரிப்பு பணிகளின்போது அமீர்-ஞானவேல் ராஜா இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, படத்தின் தயாரிப்பு பணிகளை ஞானவேல்ராஜா கைவிட்டார். இதனையடுத்து, அமீர் கடன் வாங்கி படத்தை சுயமாக தயாரித்து வெளியிட்டடார். ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தமிழகத்தின் உரிமையை கைப்பற்றியது.

ரூபாய் ஐந்து கோடி மதிப்பில் எடுக்கப்பட்ட திரைப்படம், அன்றைய நாட்களில் ஓராண்டு கடந்து திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்று ரூபாய் 16 கோடி வசூல் செய்தது. ரஜினியின் முத்து, பாட்சா திரைப்படங்களுக்கு பின்னர், தமிழ் திரையுலகில் அதிக நாட்கள் திரையரங்கில் ஓடிய திரைப்படமாக பருத்திவீரன் மாபெரும் சாதனை படைத்தது. Delhi Metro Accident: அலட்சியமாக தண்டவாளத்தை கடக்க முயன்றவர் இரயில் - நடைமேடை இடையே சிக்கி துள்ளத்துடிக்க உயிரிழப்பு: அதிர்ச்சி வீடியோ வைரல்.! 

இந்த படத்தில் ஞானவேல் ராஜா - அமீரிடையே ஏற்பட்ட மனக்கசப்பு பல ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வந்தது. சமீபத்தில் அமீர் ஞானவேல் ராஜா குறித்து தனது கருத்தை பதிவு செய்யும் வகையில் பேசினார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக ஞானவேல் ராஜா, அமீரை தரம் தாழ்த்தி பேசிய காணொளிகளும் வெளியாகி வைரலாகின.

இந்த பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகவே, இயக்குனர் அமீருக்காக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் உட்பட பல மூத்த திரையுலக நடிகர்களும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். நெட்டிசனங்களும் அமீருக்கு ஆதரவாகவே பெரும்பாலும் செயல்பட்டு வந்தனர். BCCI Extension of Contracts for Head Coach: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர், துணைப் பணியாளர்களுக்கான ஒப்பந்தங்கள் நீட்டிப்பு: பிசிசிஐ அறிவிப்பு.! 

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சினிமாத்துறையை பரபரப்பாகிய சம்பவத்திற்கு தற்போது ஞானவேல் ராஜா சார்பிலேயே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள ஞானவேல் ராஜா, "பருத்திவீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இதனால் வரை அதைப்பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே அமீர் அண்ணா என்று தான் நான் அவரை குறிப்பிடுவேன்.

ஆரம்பத்திலிருந்து அவர் குடும்பத்தாருடன் நெருங்கி பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகள், என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது, நான் பயன்படுத்தியிருக்கிற வார்த்தைகள் அவரை மனதை புண்படுத்தி இருந்தால், அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை வாழவைக்கும் சினிமா துறையும், அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி, அன்புடன் ஞானவேல் ராஜா" என்று கூறியுள்ளார். இந்த அறிக்கை வாயிலாக அமீர் - கே.இ.ஞா ராஜா இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.