NaMo Bharat Train: நமோ பாரத் விரைவு இரயில் சேவையை தொடங்கிவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.!

முந்தைய அதிவிரைவு இரயில்களுக்கு மாற்றாக பல முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் இரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Namo Bharat Train RRTS Rapid X (Photo Credit: @ANI Twitter)

அக்டோபர் 20, சாஹிபாபாத் (Sahibabad, Uttar Pradesh): இந்திய இரயில்வே துறை கடந்த 10 ஆண்டுகளாக முழுவீச்சில் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ இரயில், வந்தே பாரத், நமோ பாரத் என அதிவேக விரைவு இரயில்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

முந்தைய அதிவிரைவு இரயில்களுக்கு மாற்றாக பல முக்கிய வழித்தடங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வந்தே பாரத் இரயில் சேவை மக்களால் பிரதானமாக தற்போது உபயோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் பயணசீட்டு விலை அதிகம் எனினும், தரத்துடன் கூடிய விரைந்த சேவையை வழங்குவதால் மக்கள் அதில் பயணித்து வருகின்றனர். அதிகபட்சமாக இந்த இரயில் 160 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும். US Judge Shot Dead: அமெரிக்காவில் பயங்கரம்: வீட்டில் இருந்த நீதிபதி மர்ம நபரால் சுட்டுக்கொலை.. அதிர்ச்சியில் மக்கள்.! 

இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சாஹிபாபாத் நகரில் இருந்து டுகாய் (Sahibabad to Duhai) நகரை இணைக்கும் RRTS (Regional Rapid Transit System) எனப்படும் பிராந்திய விரைவு இரயில் போக்குவரத்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் முதல் RapidX இரயில் சேவையான RRTS இரயில் சேவைக்கு, நமோ பாரத் (NaMo Bharat) எனவும் பெயரிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த இரயில் சாஹிபாபாத் - டுகாய் இடையேயான 32 கி.மீ சேவையை வழங்குகிறது. டெல்லி-காசியாபாத்-மீரட் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வழித்தடத்தில், இந்த இரயில் அதிகபட்சமாக 180 கி.மீ வேகத்தில் பயணிக்கும்.

தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா வெகுவாக முன்னேறி வரும் நிலையில், உட்கட்டமைப்புகள் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டு வருவது அதன் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என வல்லுநர்கள் கருத்து தெரிவிகின்றனர்.